சமூக மாற்றத்தை நோக்கி...

வினா விடை


வினா (1)
1. சவுதி பின்பற்றும் கணிப்பீட்டு முறை
2. எமது நடைமுறையில் உள்ள நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பது.
3. நவீன தொழினுட்பத்தை பயன்படுத்தி பிறை பார்ப்பது.

விடை (1)

அந்த மூன்றில் இரண்டாவது விடயம் நபிகளர் (ஸல்) அவர்களது காலத்துக்குறிய சுன்னா. அடுத்த இரண்டு விடயங்களைப் பொருத்தவரை நவீன தொழினுட்பத்தைவைத்து ஆராய்ந்து ஒரு கணிப்பீட்டுக்கு வந்து அதனைப் பின்பற்றுவது இது இன்றைய காலத்துக்குறிய சுன்னாவாகும்.

சுன்னா என்பது குறித்து பரந்த பார்வை இன்று தேவைப்படுகின்றது.

ஏனெனில் நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் தொழினுட்ப வசதிகளே, அறிவியல் வளர்ச்சியோ ஏற்பட்டில்லாத காலமாகும். அத்தகைய ஒரு காலத்தில் நபிகளாரோ, அல்குராஆனோ நேரடியாக தொழினுட்பத்தையும், அறிவியலையும் பேசுவது சாத்தியமற்ற ஒரு விடயமாகும். எனவே அத்தகைய ஒரு சூழ்நிலையை கருத்திட்கொண்டே வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. இன்றும் நாம் அந்த வழிகாட்டல்களை இன்றைய சூழ்நிலைகளை கருத்திட்கொண்டு விளங்கிசெயட்பட வேண்டும்.

இதனை கீழ்வருமாரு சுருக்கமாக விளக்கலாம்.

1. தொழுகைக்கு கடிகார நேரம் அமைக்கப்பட்டது.
2. சஹர் நேரம் குர் ஆனுக்கு நேரடி மாற்றமாக கடிகார நேரம் அமைக்கப்பட்டது.
(இல்லை நாம் கருப்பு நூல், வெள்ளை நூல் பார்த்துத்தான் முடிப்போம் என்றால் என்ன சொல்வோம்?)
3. இத்தாவுக்கான காலம்.
(இல்லை நாம் பிறை பார்த்துத்தான் ஆரம்பிப்போம் என்றால், எப்போது?)
4. இன்று வால்களைக் கொண்டு ஜிஹாத் செய்வதில்லை, அவ்வாறு செய்யவும் முடியாது என்பது எமக்கு தெளிவாகத் தெரிகிறது.
(இல்லை நபிகளாரின் சுன்னா எனவே நாம் வால்களால் தான் யுத்தம் செய்வோம் என்றால் நாம் என்ன சொல்வோம்?)
5. ஹஜ்ஜுக்கு ஒட்டகங்களில் செல்லவதில்லை. அவ்வாறு செல்வதும் முடியாதது.
(இல்லை நபிகளாரின் சுன்னா எனவே நாம் ஒட்டகங்களில் தான் ஹஜ்ஜுக்கு செல்வோம் என்றால் நாம் என்ன சொல்வோம்?)

மேலோட்டமாக பார்க்கும்போது நாம் இன்று நபிகளார் (ஸல்) குறிப்பிட்ட பல விடயங்களுக்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கின்றோம்.

உதாரணமாக,
1. ஆரம்காலத்திலே அபூபக்கர் (ரழி) அவர்கள் கற்கலிலும், பட்டைகளிலும்.... காணப்பட்ட அல்குரானை நபிகளார் (ஸல்) காட்டித்தராத வழிகளினூடாக ஆதாரம் எடுத்து ஒரு புத்தகமாக அமைத்தார்கள்.
2. உஸ்மான் (ரழி) அவர்கள் அக்குரானை பல பதிப்புக்கள் செய்து பல நடுகளுக்கும் அனுப்பினார்கள்.
3. பிற்பட்ட காலத்தில் உச்சரிப்பும், கருத்தும் மாறாது குராஆனின் அரபி லிபி வடிவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றுக்கு நுக்தாக்கள், ஏனைய குறியீடுகள் இடப்பட்டு அனைவருக்கும் வாசிப்பதற்கு இலகுவாக்கப்பட்டது. (குறிப்பாக ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப்)
4. ஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு நிரந்தர ராணுவம், கடற்படை என்பன உருவாக்கப்பட்டன.
5. ஓரிருவருக்கே நபிகளார் ஹதீஸ்களை எழுத அனுமதியளித்திருக்க பிற்பட்ட காலத்தில் பலர் ஹதீஸ்களை போதித்தும் (ஹதீஸ் வகுப்புக்கள்) , தொகுத்தும் (ஹதீஸ் புத்தகங்கள்) வந்தனர்.
6. அல்குரான் இயந்திரங்களின் மூலம் அச்சுப் பதிப்பு செய்யப்பட்டன.
7. இன்று அல்குரான் ஒலி, ஒளி நாடக்களிலும் மற்றும் சீடிக்கள்.... பலதில் வெளிவந்துள்ளன.
(அல்குர் ஆனுக்கே இத்தகைய இன்னும் பல அநியாயங்களை செய்துள்ளோம்)
இது தவிரவும் இன்னும் பல......

(இவை ஒன்றுமே நபிகளார் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அல்ல அப்படியெனில் நாம் மாற்றம் செய்கிறோமா? உண்மையில் இது மாற்றம் அல்ல இது தான் இன்றைய காலத்தில் பின்பற்ற வேண்டிய சுன்னாவாகும்)

ஏனெனில் தொழினுட்பமும், அறிவியலும் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் அதனை புறக்கணிப்பது பெரும் தவறும் மடமையுமாகும். இப்படி இருக்கும்போது நாம் தொழினுட்பத்தை ஏற்க பின்னிற்பது முறையல்ல.

இன்றைய முக்கிய பிரச்சினையாகக் காணப்படும் பிறைவிவகாரத்தை எடுத்துக் கொண்டாலும். இதற்கும் நபிகளார் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல் இருப்பதனை அவதானிக்க முடியும்.

 “ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அபூஹூரைரா (رضي), திர்மிதி)

"நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது; கணக்கிடவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்.அதாவது 29ஆகவோ 30 ஆகவோ இருக்கும்"  (இப்னு உமர்(رضي),புகாரி)

மேலும் பார்க்க: அல்குர்ஆன்:- 6:96, 10:05, 13:02, 21:33, 36:38-40, 55:05, 2:189)

இவை எம்மை கணக்கிடச் சொல்கின்றன. இதனை பின்பற்றாமையே வழிகேடாகும்