சமூக மாற்றத்தை நோக்கி...

Sunday, December 25, 2011

எது இஹ்வான்களின் காலம் அது இஸ்லாத்தின் காலம்

அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் எதற்கென்றால் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள்இ இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும், கொள்கைகளையும், இஸங்களையும், வாதங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே. (9:33)

இஸ்லாத்தை உலக மக்களின் வாழ்க்கை நெறியாக, வாழும் கொள்கையாக உலகில் தலைநிமிர்த்திவைத்துப் பார்க்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் ஆசையை உலகில் நிலைநிறுத்த வந்த இறுதித்தூதர் ரஸூல் (ஸல்) அவர்கள் அந்த ஆசையை தனது வாழ்நாளில் உலகில் நிலைநிறுத்திக் காட்டிச் சென்றார்கள். அதன் பின்னர் அந்த நெறி உலகத் தளத்தில் இருந்து படிப்படியாக விடைபெறத்தொடங்கி 1924இல் பெயரலவில் இருந்த இஸ்லாமிய ஆட்சி (கிலாபத்) அல்லாஹ்வின் எதிரியாகப் பார்க்கப்படும் கமால் அதாதுர்க்கினால் தூக்கி எரியப்பட்டு சடவாதம், மதச்சார்பின்மை என்பன நீதி சொல்லவும், வழிகாட்டவும் ஏற்ற மார்க்கமாக ஆக்கப்பட்டு பின்பற்றப்படலாயிற்று.

இந்த நிலையில் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் தோற்றம் பெற்று இந்த மிகப்பெரிய ஷிர்க்கில் இருந்தும், இழிநிலையில் இருந்து சமூகத்தை கரைசேர்க்க முற்பட்டனர். அந்த முயற்சிகளினூடாக 1928இல் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்) அவர்களினால் அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1926 களில் மௌலானா இல்லியாஸ் (ரஹ்) அவர்களால் மத்ரஸா மாணவர்களைக் கொண்டு ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அது நாளடைவில் தப்லீஹ் ஜமாஅத்ஆக மாறியது. அதனைத் தொடர்ந்து மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களினால் 1941இல் ஜமாஅதே இஸ்லாமி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு பல ஜமாஆத்கள் தோன்றின.

இந்த அமைப்புக்களில் சில இஸ்லாத்தினை அடிப்படையாகவைத்து நவீன காலத்துக்கு ஏற்ப தமது நாட்டு, சமூக சூழ்நிலைகளைக் கருத்திட்கொண்டு செயற்திட்டங்களை அமைத்து செயற்பட ஆரம்பித்தன. இந்த ஒழுங்கில் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது அல்-இஹ்வானுல் முஸ்லிமூனின் மற்ற அமைப்புக்களில் இல்லாத சிறந்த பயிற்றுவிப்புக்களாளும் தஃவா அனுகுமுறைகளாளும் இஸ்லாமிய சமூகத்தில் பாரிய செல்வாக்குப் பெறத்தொடங்கியது. அதனது தாக்கம் இன்றைய உலகின் அனைத்து நாடுகளிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

அத்துடன் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பைச் சுற்றி பாரிய அறிஞர்கள் வட்டம் காணப்படுவதும், அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தமது உயிர்களையும், உடமைகளையும் கொடுத்து செய்த தியாகங்களினால் அல்லாஹ்வின் அருளைப் பெற்று உலகில் தவிர்க்க முடியாத சக்கியாக வளர்ந்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பும் அந்த இயக்கத்தை சேர்ந்த போரளிகள் அறிஞர்கள் போன்றோர் இன்றைய உலகில் அவர்களது செயற்பாடுகளில் பாரிய அளவில் வெற்றி கண்டு வருகின்றதை நாம் மிகத்தளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில் அத்தகைய வெற்றிகளை, சர்வதேச அங்கீகாரத்தை, சர்வதேச தரத்தை அடையத் தவறிய இயக்கங்கள் (குறிப்பாக மிகச் சில ஸலபிகள் மற்றும் இலங்கை இந்திய தௌஹீத் இயக்கங்கள்) அந்த குரோதத்தால் அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்களை தமது மனக்கவளைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சிறிய விடயங்களை பூதாகரமாகக் காட்டியூம், கருத்து வேறுபாடுகளுக்குறிய விடயங்களில் தமது கருத்தை மாத்திரம் சரி கண்டு இஹ்வான்களது கருத்துக்களை வழிகேடாகக் காட்டியும், அபாண்டங்களை அவர்கள் மீது சுமத்தியும் அவர்களை முஸ்லிம்களிடம் இருந்து பிரித்துவிடுவதற்கான முயற்சிகளை இயக்கமாக சேர்ந்த செயற்படுத்தி வருகின்றனர்.

இதற்குக் காரணம் என்ன?

இன்று இஹ்வான்கள் கிட்டத்தட்ட 100 நாடுகளில் உத்தயோக பூர்வமாக செயற்படுகின்றனர். அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகமான நாடுகளில் அவர்கள் தவிர்க்க முடியத சக்கியாக மேற்குலகு பயப்படக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்ந்து வந்துள்ளதுடன் கடந்த 80 வருடங்களாக அவர்களை பலமுனைகளிலும் அடக்க முற்பட்ட நாடுகள் தோழ்வியையே தழுவியூள்ளன. இதனைத்தான் சிரியாவின் பஷர் அல் அஸத் 29.10.2011 அன்று ஆற்றிய உரையில் ‘நாம் இஹ்வானுல் முஸ்லிமூனுடன் ஐம்பதுகளில் இருந்து போராடுகிறோம். தொடர்ந்தும் போராடுவேம்’ எனக் குறிப்பிடடார். இது ஒரு நாடு மாத்திரமே.

இத்தகைய ஒரு வளர்ச்சியை இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் 1800களில் ஸலபிய சிந்தனையை ஆரம்பித்தது முதல் இன்று 2 நூற்றாண்டுகள் தான்டியூம் ஸலபிசம் அல்லது தௌஹீத்வாதம் அடைந்து கொள்ளவில்லை என்கின்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகும். இத்தகைய வயர்ச்சி அடையாமைக்குக் காரணம் இவர்கள் இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் செயற்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாமையும் போதிய இஸ்லாமிய அறிவின்மையுமாகும். இதனை இவர்கள் திறுத்திக் கொள்வதைவிட்டு இஹ்வான்களின் வளர்ச்சியில் எறிச்சல் படுவதில் பயனில்லை.

அடுத்து இன்று உலகில் அனைவராலும் பேசப்படும் ஒரு பேச்சுப் பொருளாக இஹ்வானுல் முஸ்லிமூன் என்கின்ற வசனம் செல்வாக்குப் பெற்றுள்ளது. இதுவரை காலமும் இஹ்வான்களை மேற்கும் மற்றும் முஸ்லிம் நாடுகளின் அரசுகளும் பயங்கரவாதிகளாகவூம்இ தீவிர வாதிகளாகவூம் சித்தரித்து வந்தது. ஆனால் இன்று இஹ்வான்களின் செயற்பாடுகள் வெளியாகத் ஆரம்பித்ததுடன் அவர்களுக்கு அந்த நாட்டு மக்களிடம் காணப்படும் ஆதரவையும் உறவுகளையும் காணும் மேற்கு சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகி இறுகிப்போயூள்ளது. அவர்களிடம் காணப்படும் மனிதாபிமானம், சமூக நோக்குஇ சீரிய சிந்தனை, அனைவரையூம் அரவனைக்கும் இளகிய போக்கு இன்று உலகை சிந்திக்க வைத்துள்ளது.

இஸ்லாம் குறித்து மேற்கிடமும், மதச்சார்பற்றவர்களிடமும் காணப்பட்ட பிழையாக கருத்துக்ளை அழிப்பதில் இஹ்வான்கள் மிகக் கவனமாக செயற்பட்டார்கள். ஐரோப்பாவை இஸ்லாத்தினுல் இழுத்து செல்லும் பணியை அவர்கள் கச்சிதமாகச் செய்துவருவதை அவர்கள் அவதானிக்கிறார்கள். எனவே பேசுகிறார்கள். இது வேதனைப்படக் கூடிய ஒன்றல்ல முஸ்லிம்கள் சந்தோசப்பட வேண்டும், துஆ செய்ய வேண்டும். ஆனால் தௌஹீத்வாதம் அதிர்கிறது. 



அதேபோன்று இன்று உலகில் எங்கு சென்றாலும் இஹ்வானிய அறிஞர்களே அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றனர். ஸலபி சிந்தனை செல்வாக்குள் நாடுகளில் கூட இஹ்வான்களே ஆக்கிரமித்துள்ளனர், மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். (மிகச் சொற்ப உதாரணங்களாக சவூதியில் முஹம்;மத் குதுப், கட்டாரில் கர்லாவி, குவைத்தில் நாதின் நூரி…..) இதற்கு அவர்களிடம் இஹ்வானுல் முஸ்லிமூன் வளர்த்துவிட் ஆலுமையும்இ அவர்கள் அங்கு பெற்ற இஸ்லாம் குறித்தான விரிவான பார்வையூம் காரணமாகக் காணப்படுகின்றது. எனவே அதற்காக ஆவேசப்படுவது மடமையாகும். அதற்கு அவர்கள் என்தான் செய்ய இஸ்லாத்தைப் படிக்கிறார்கள் அதன்படி செயற்படுகிறார்கள் அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு சமீபமாக இருக்கிறது.

முஸ்லிம் உலகுக்கு எதிரான செயற்பாடுகளின்போது அதனை தடுப்பதற்கான அவர்களது வித்தியாசமான  போராட்டங்களை அவர்கள் ஆரம்பம் முதல் மேற்கொண்டு வந்தார்கள். குறிப்பாக 1940 பின் எகிப்தில் இருந்த மன்னர் பாரூக்குக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியில் அவர்கள் பங்கு கொண்டார்கள். 1948களில் இருந்து பலஸ்தீனில் யூதர்களின் ஆக்கிரமிப்புக்களை தடுப்பதில் தீவிரமாக செயற்பட்டார்கள்இ அவர்களது ஹமாஸ் எனகிற ஆமைப்பு இன்றுவரை தனது ஆன்மீக பலத்தால் மாத்திரம் இரண்டு வல்லரசுகளுடன் போரிட்டு பாரிய வெற்றிகளை கண்டு வருகின்றது. அன்மையில் அமெரிக்காவின் பிரதிநிததி ஒருவர் கூறும் போது ‘இஸ்ரேல் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுகின்றதுஇ அதனைக் காத்துக்கொள்வத ஸ்ரேலின் பொருப்பாகும்’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு வல்லரசுகளே கைவிடும் அளவூக்கு அவர்களது கை ஓங்கியூள்ளதைக் காட்டுகின்றது.

அதேபோன்று ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியனிடம் இருந்த மீட்பதில் இஹ்வான்கள் தமது ஒரு போராட்ட இயக்கத்தையே நிறுவி செயற்பட்டு ஆப்பானிஸ்தானின் விடுதலைக்கு பங்காற்றினார்கள். அதேபோன்று ஆப்கானிஸ்தான் போராட்டக் குழுக்களுக்கிடையில் முறுகள் நிலை ஏற்பட்டபோது அதனை தீர்ப்பதில் அவர்கள் மும்முறமாகச் செயற்பட்டார்கள்.

அவ்வாறே ஈராக்கை நேட்டோ படைகள் தாக்கி கைப்பற்றிய பின்னர், ஈராக்கில் பல சீரழிவூகளை அவர்கள் மேற்கொண்டார்கள். அதன்போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவூம்இ ஈராக்கை மீட்பதற்காகவூம் அவர்கள் அங்கு ஜிஹாதை மேற்கொண்டார்கள். அத்துடன் செச்னியாவில் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புககு எதிராக அந்த நாட்டு ஜனாதிபதியுடைய படைகளுடன் இனைந்து இஹ்வான்கள் ஜிஹாதில் இன்றும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இத்தகைய இவர்களின் உலகலாவிய செயற்பாடுகளால் அவர்கள் உலக மக்களால் தவிரக்க முடியாத சக்தியாக பலம்பெற்று வளர்ந்துள்ளார்கள். இத்தனைய செயற்பாடுகளை அவர்கள் செய்ததற்குக் காரணம் இஸ்லாத்தின் போதனைகயை இஹ்வான்கள் சரியாக உள்வாங்கி இருந்தமையாகும். நபிகளார் (ஸல்) அவர்கள் “யார் முஸ்லிம்களின் விடயங்களில் கரிசனைகாட்டவில்லையே அவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறியதற்கு இனங்க மற்றும் “இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்த கொள்ளுங்கங்” என்ற அல்குர்ஆனிய வாசனத்துக்கும் இணங்க அவர்கள் இஸ்லாத்தை கூறுபோட்டு நோக்காது அல்லது ஸலபிகளைப்போன்று தமது கொள்கைகளுக்கு இயைபானவற்றை மட்டும் கூடுதலாகப் பேசதல், செயற்படுத்தல் என்றில்லாமல் இஸ்லாத்தை அவர்கள் பூரணமான ஏற்று செயற்பட பழக்கப்பட்டிருந்தமையாகும்.

இவை அனைத்தையும்விடவும் ஸலபிசம் இன்று அதிகம் மனவியாதிக்குள்ளாக்கப்பட்டிருக்கும் விடயம், அரபுகளின் எழுச்சியில் இஹ்வான்களின் சிந்தனைத் தாக்கமும், அவர்களின் பங்களிப்புக்களாகும்.

இதனை எடுத்து நோக்கும் போது நவீன் அரபு எழுச்சியில் அவர்களின் பங்களிப்பு மறுக்க, தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் இன்று புரட்சி ஏற்பட்ட நாடுகளில் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அத்தொடரில் அந்நாடுகளில் காணப்பட்ட தீய ஆட்சியாளர்கள் மக்களின் எதிர்ப்பு காரணமாக நாட்டைவிட்டும் ஓடவேண்டிய நிலை எற்பட்டு சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். அவ்வாறு அந்த தலைவர்களின் வெளியேற்றங்களுக்குப் பின்னர் அந்த நாடுகளில் ஏற்பட்ட தேர்தல்களில் இஹ்வான்களின் கட்சிகள் மக்களின் கூடுகலான ஆதரவுகளைப் பெற்று ஆட்சிஅமைக்கக் கூடிய நிலைக்கு வந்துள்ளன.

அத்துடன் இத்தகைய எழுச்சிகளுக்குப்பயந்த பல நாடுகள் முன்யோசனையாக ‘வெள்ளம் வருமுன் அனைகட்டல்’ என்பதற்கினங்க அரசியலில் பல மாற்றங்களைச் செய்துவருவதுடன் குறிப்பாக இஹ்வான்களுக்கு கூடிய பங்களிப்புக்களை வழங்கியூள்ளனர். இதன் தொடரில் மொரோக்கேவில் நடைபெற்ற தேர்தலில் இஹ்வான்கள் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துள்ளனர். குவைத் போன்ற நாடுகளில் பாரிய அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவையும் இஹ்வானிய எழுச்சியின் மூலம் இஸ்லாம் அடைந்த வெற்றியின்  பிரதிபளிப்புக்களே. ஆனால் இவற்றை இந்த ஸலபிசம் கண்டுகொள்வதில்லை என்பது தான் ஆச்சரியம்.



இன்று முஸ்லிம் நாடுகளில் நடைபெற்றுவரும் சீர்திருத்தப் புரட்சிகளில் இஹ்வான்களே முன்னனியில் இருக்கின்றனர். அந்த புரட்சிகளை வழிநாடாத்திச் செல்வதில் அவர்களுது வழிகாட்டல்கள் மிகப் பொருத்தமானதாக மக்கள் காண்கின்றனர். இஹ்வானிய அறிஞர்கள் குறிப்பாக அல்லாமா யூசுப் அல் கர்லாவி போன்றோறது வழிகாட்டல் உந்து சக்தி அவர்களது பத்வாக்கள் இன்று மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுக் காணப்படுகின்றது. இதுவரை புரட்சி வெற்றி பெற்ற மூன்று நாடுகளிலும் இஹ்வான்கள் வெற்றி உயிரூட்டியவர்களாக அந்நாட்டு மக்களால் போற்றப்படுகின்றனர். இதனால் தான் தியூனீசியாவில் இஹ்வான்கள் ஆட்சிக்கு வந்தனர். அவ்வாறே எகிப்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களில் இஹ்வான்கள் மிகவூம் ஆதரவுகளைப் பெற்றுள்ளனர். அங்கு அரசியல் இஸ்லாத்ததில் இல்லை என்று கூறும் அல்லது அரசியலுக்கான இத்தகைய பிரயத்தனங்கள் தேவையில்லை என்று கூச்சலிடும் ஸலபிசம் கூட தமது கொள்கைகளை ஒருபுறம் வைத்துவிட்டு அரசியலில் இரங்கி செயற்படுகின்றனர். புரட்சி வெற்றி பெற்ற நாடுகளில் முதல் குத்பாக்களுக்குக் கூட கர்லாவியே அழைக்கப்பட்டார்.

அத்துடன் இது ஸலபிச நாடு என்று கத்தும் அவர்கள் தமது நாடுகளில் காணப்படும் அராஜகங்களை கண்டுகொள்ளாதவர்களாகவே இருந்துவந்தனர். இதனால் அவர்களது சவூதி, குவைத்… போன்ற நாடுகளில் கூட இப்போது புரட்சி வெடிக்கும் நிலை தோன்றியூள்ளது. இந்த புரட்சிகளுக்கு நாட்டு மக்கள் அரசையூம் மீரி ஆதரிக்கும் நிலை தோன்றியூள்ளது. இந்த நிலையில் தமது இருப்புக்கும் பாதிப்பு ஏற்படப்போகின்றது என்று கண்ட அரசுக்கு வாழ்பிடிக்கும் ஸலபிசம் மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக சம்பந்தமில்லத பத்வாக்களை வழங்கி வருகின்றனர். அத்துடன் இஹ்வான்களை மோசமானவர்களாக சித்தரித்துக் காட்டுவதற்காக இஹ்வான்களின் சிந்தனைகளை திரித்துக் கூறியும் இஹ்வான்களின் சர்வதேச அறிஞர்கள் மீது அபாண்டங்களைச் சுமத்தியும் வருவது நகைப்புக்கிடமானது. இது இன்றைய உலகில் எடுபடாத அவர்களை இன்னும் தாழ்த்திக் கொள்ளும் செயற்பாடுகளாகும்.

அதிலும் விஷேடம் அரபு நாட்டு ஸலபிசத்தின் உலரல்களை இந்திய, இலங்கை நாட்டு குறுட்டு தௌஹீத்வாதமும் சிரமேற்கொண்டு பரப்பிவருவதாகும் இது இஸ்லாத்துக்கு எதிரான ஸியோனிசத்தின் உத்தியகளில் ஒன்றாகும். இது தவிரவூம் அவர்கள் எங்கு செயற்பட்ட போதும் ஒரு குடையின் கீழ் செயற்படுகிறார்கள். ஆனால் ஸலபிசமும் தௌஹீத்வாமும் இன்று பல பிரிவூகளாகப் பிரந்த தமக்குள்ளால் உள்ள பிரச்சினைகளால முட்டிமோதிக் கொண்டுள்ளனர். எனவே தமது இந்த அறிவீனமான விடயங்களை மறைப்பதற்காகவூம் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றர் எனலாம்.

இதில் உள்ள பிரச்சினை எத்தகைய மாற்றங்களும் தங்களால் தான் வரவேண்டும். நாம் தான் உலகில் பேசப்படவேண்டும் இதில் யாரும் எம்மை முந்திவிடக்கூடாது என்கிற மனனோயகும். இது அன்று நபிகளாரை ஏற்காத யூதர்களிடம் இருந்த மனப்பாங்காகும் இதனால் தான அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மையில் நபி என்று அறிந்து அவர்களை ஏற்கவிடாமல் செய்தது. எனவே இந்த மனநிலையில் இருந்த நீங்குமாறும் இஸ்லாமி எழுச்சிக்கு தங்களால் முடியுமான பங்களிப்புக்களை வழங்குமாறும் அநியாயமாக முட்டுகட்டைகளை இடுவதை விட்டும் தவிர்ந்திருக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஸலபிசத்தாலும் தௌஹீத்வாதத்தாலும் முஸ்லிம் சமூகத்தில் காத்திரமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை இஹ்வான்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அது குறித்து அவர்களிடம் மட்டரகமான மனப்பாங்கு இல்லை. ஒரு விடயம் குறித்தது நீங்கள் கருத்துக் கூறும் போது பல இடங்களில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இன்றும் இந்நிலை காணப்படுகின்றது. ஆனால் நீங்கள் கூறும் கருத்து உண்மையில் குர்ஆனின் கருத்தாக இருந்;தாலும் அதனை சாதாரன மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை காரணம் அது அவர்களுக்கு புதியது. புதியது என்பதற்காக மறுப்பது அறிவீனத்தின் அடையாளமாகும். எனவே மாற்றுக் காருத்துக்களை ஆராய்ந்த அந்த மாற்றுக் கருத்துக்களுக்க சந்தர்ப்பம் இருக்கும் போது அதனை ஒரு வருக்கு சொல்வதற்கான அனுமதியை நாம் வழங்க வேண்டும். என்ற விடயத்தை சிந்தனையில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் ஒரு எச்சரிக்கையையூம் செல்லிவைக்கிறேன். அது தான் இன்றைய இஸ்லாமிய எழுச்சியை தடுத்து நிறுத்துவதில் மேற்கத்தேயமும் ஸியோநிசமும் சுகபோகத்தில் திலைத்திருக்கும் அரபுநாட்டு தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஒருமித்து செயற்படுகிறார்களோ. அதே போன்று அல்லது அதைவிடவூம் ஒரு படி மேல் சென்று இன்று ஷீயாக்களின் தலைமைகள் இஹ்வான்களுக்கு எதிராக செயற்பட்டுவருகின்றனர் என்பதனை நாம் நிதர்சனமாகக் கண்டு கொண்டிருக்கின்றௌம். அதற்கு சிரிய தலைவர் அஸதின் நான் மேற்குறிப்பிட்ட கூற்றும் மிகச் சிறந்த உதாரணமாகும்.



இந்த கொந்தளிப்பான நிலையில் ஈரான்இ ஈராக் போன்ற ஷீயாக்களை பெறும் பான்மையகக் கொண்ட நாடுகளும் ஹிஸ்புல்லாஹ் போன்ற தீவிர ஷீயா இயக்கங்களும் சேர்ந்து இந்த புரட்சியை நசுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இலங்கையில் வெளியாகும் ‘தூது’ கடைசி சஞ்சிகையில் இடம் பெற்ற கட்டுரை ஒன்றில் ஷீயாக்களின் ஆன்மீகத் தலைவர் அவர்கள் தமது ஒரு செய்தியில் அரபு நாட்டு புரட்சிகள் குறித்தம் அந்த தலைவர்கள் விரட்டப்பட வேண்டும் என்பது குறித்தும் சார்பான் கருததை சொல்லிக் கொண்டவரும் அவர் சிரியா குறித்து எத்தகைய கருத்துக்களையூம் கூறாது விட்டுள்ளார். இது எதனைக் குறிக்கின்றது அவர்கள் அனைவரும் அலவிய தீவிர ஷீயாவான அஸத் எவ்வளவூ மோசமானவனாக இருந்தாலும் அவன் ஷீயா என்பதால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.



இதே கொள்கையை இன்றைய ஸலபிசமும் தௌஹீத்வாதமும் கையாண்டு வருவதை காணமுடிகின்றது. இது சியோனிசத்துக்கும் ஷீயாக்களுக்கும் சார்பான் செயற்பாடாகும் அது அவர்களுடைய செயற்பாடுகளுக்கு சாதகமான தாகும் எனவே கடுமையான ஷீயாக்களை எதிர்க்கும் இவர்கள் இந்த விடயத்தில் ஷீயாக்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியூள்ளது. ஷீயாக்களும், சியோனிசமும் இஹ்வான்களின் திட்டமிட்ட செயற்பாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்ட வரும் இந்நிலையில் ஸலபிவத்தினதும் தௌஹீத்வாதத்தினதும் இச் செயற்பாடுகள் அவர்களுக்கு ஆதரவையூம் பலத்தையூம் கொடுக்கும் முயற்சியாகக் காண்கிறௌன். இந்த இஸ்லாமிய விரோதச் செயலை, அகீதாவூக்கு வேட்டுவைக்கும் இந்த செயற்பாடுகளை அவர்கள் தெரியாமல்தான் செய்வதாக உணர்கிறௌன். எனவே அவசரமா சிந்தித்து செயற்படுமாறும் உலக இயக்கத்தை சரியகப் புரிந்து கொள்ள முயற்சிக்குமாறும் கோட்கிறேன்.

இல்லை இதனையூம் தெரிந்த கொண்டுதான் செயவதாக இருந்தால் அது இஸ்லாத்துக்கு வேட்டுவைக்கும் செயற்பாடகும். இது அவர்களின் சுயநலத்தை மிகத் தெளிவாக தௌஹீவாக காட்டும் செற்பாடகும். தெளிவான இஸ்லாமிய அறிவு இல்லாததால் ஏற்பட்ட ஒரு உளவியல் வியாதியாகும்.

மிகச் சுருக்கமாகச் சொன்னால் இஹ்வான்களின் வளர்ச்சியாள் ஸலபிசம் அதிருகிறது எனலாம்.

அதிர வேண்டிய அவசியமே இல்லை அவர்கள் உங்களை என்றும் சகோதரர்களாகவே பார்க்கின்றனர்.

இன்ஷாஅல்லாஹ் அவர்கள் மனித சமூகம் அனைத்தையூம் அரவனைத்துச் செயற்படும் நெகிழ்வூத் தன்மை கொண்ட இஸ்லாமியத்தால் போசிக்கப்பட்ட இஸ்லாமியர்கள்.

சுக்ரி நஸ்லியா
றம்புக்கனை.
25.12.2011

Tuesday, November 29, 2011

இஸ்லாமிய இயக்கங்கள்


அல்லாஹ் மனிதனை ஓரே ஆண் பெண்னிலிருந்தே படைத்துள்ளான். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை முடிந்தளவு பின்பற்றியும் விலக்கள்களை முலுமையாக தவிர்ந்தும் வாழுமாறும் கட்டளையிட்டான். இவர்களுக்கு வழிகாட்ட 124000 நபிமார்களை (ஒரு ஹதீஸில் 224000 நபிமார்களை) அனுப்பிவைத்தான். அல்லாஹ் அல்குராஆனில் கூறும் போது "அவர்கள் அனைவரும் லாஇலாக இல்லல்லாஹ்" என்ற ஒன்றையே போதித்ததாகவும் அவ்வாறே அந்த நபிமார்களிடையே எந்த வேறுபாடுகளும் இல்லை என்றும் குறிப்பிடுகின்றான்.

எனினும் இந்த நபிமார்களது உம்மத் பல பிரிவுகளாக பிரிந்து சென்றுள்ளனர். அவர்களிலும் குறிப்பாக முஹம்மத் ரசூல் (ஸல்) அவர்களது உம்மா நபிகளாரே குறிப்பிட்டதுக்கு இணங்க 73 ஆகப்பிரிந்துள்ளது. அது அவ்வாறு இருக்க அவர்களில் காணப்படும் 'சுன்னத் வல் ஜமாஆத்' ஐ எடுத்துக்கொண்டால் அவர்களும் பல மத்ஹப்களாகவும், பல இயக்கங்களாகவும், பல கட்சிகளாகவும், பல இனங்களாகவும் பிரிந்து காணப்படுகின்றனர். இத்தகையா பிரிவுகளை நாம் பலபோது சரிகாணலாம், காரணம், அவற்றினது நோக்கம், காலசூழ்நிளைகளிளைகளினால்.

உதாரணமாக; 
மதஹப்களை நோக்கினால் - ஒவ்வொரு மத்ஹபுடைய இமாம்களும் தமது காலத்தில் ஸ்லாம் பலவீணப்பட்டிருந்த போது அன்றைய சமூகத்தை வழிகாட்டி ஸ்லாத்தின் கீழ் வைத்திருப்பதற்கு அவரகளுக்குத் தேவையான சட்டவிடயங்களை தமக்குத் தெரிந்த குராஆனிய, ஹதீஸ் களின் நிழலில் போதித்தும், புதிய பிரச்சினைகளுக்கு இஜ்திகாத் மூலமாக தீர்வுகளைக் கொடுத்தும் சமூகத்தைப் பாதுகாத்து வந்தனர். பிட்பட்ட காலங்களில் அந்த இமாமினது சட்டங்கள் அவர்களது மாணவர்களினால் தொகுக்கப்பட்டு அவற்றைக்கொண்டு அந்த மாணவர்கள் சமூகத்துக்கு தீர்வுகளை சொல்ல நாளடைவில் அது பின்பற்றத்தக்க ஒரு பாதுகாப்பான வழிமுறையாகி அதனைக்கொண்டு தமது மார்க்கவிடயங்களை செயட்படுத்தி வந்தனர்.

இவ்வாறு பல இமாம்களது மாணவர்கள் அவரவர் ஆசிரியரது சட்டங்களை தொகுத்தபோது அவை ஷாபி, ஹனபி, மாலிக், ஹம்பலி, ழாஹிரி....... என பல நூறு மத்ஹப்களாக மாரி அதில் பல காலப்போக்கில் இல்லாமல் போக ஒரு சில இன்று வரை காணப்படுகின்றன. எனினும் இந்த மத்ஹப்பளில் கணப்படும் பல விடயங்கள் ஸ்லாத்துக்கு முறனானவைகளாகவும், ஆதாரம் அற்றவைகளாகவும் உள்ளன என்று பலர் குறை கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டு நியாயமானது. எனினும் இக்கிற்றச்சாட்டுக்களுக்கு அந்த இமாம்கள் பொருப்பானவர்கள அல்லர். ஏனெனில் இந்த விடயங்கள் அவர்களது சீடர்களால் புகுத்தப்பட்டவைகளாகும். எனினும் அந்த பிழைகள் தெறிந்தும் குறிப்பிட்ட மத்ஹபை பின்பற்றுபவர்கள் அவற்றை கவனிக்காதது மிகப்பெரும் தவறாகும்.

இயக்கங்களை நோக்கினால்
குலபாக்களினது ஆட்சிக்கு பின்னால் ஸ்லாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதன்போது நாளடைவில் ஸ்லாம் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டது அல்லது பள்ளிக்குல் மாத்திரம் மற்றும் சில சடங்கு சம்பிரதாயங்களில் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு அம்சமாக மாரியது. இது தொடர்ந்து கி.பி. 1924 இல் பெயரளவு கிலாஃபத்தும் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் ஸ்லாம் திக்குத் தெரியாமல் வீசிஎறியப்பட்டது. இதன் ஆரம்ப கட்டமான கி.பி. 1000 களுக்கு பின்னர் அரபுநாடுகளில் சிலைவணக்கம், ஷிர்க்கான விடங்கள் மழிந்து காணப்பட்டது இதனை எதிர்கொள்ள இமாம் தகியுத்தீன் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் போராடினார்கள். இதனை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் புரட்சியாகவே குறிப்பிடுகிறார். அதனை அடுத்து கி.பி. 1750 களுக்கு பின்னர் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஒரு போரட்டத்தைக் கொண்டுசென்றார்கள்.

இந்த போராட்டங்களின் விளைவாக மேற்கத்தேயா ஸ்லாமிய எதிர்ப்பு வரலாற்று ஆசிரியர்களினால் 'வஹ்ஹாபிகள்' எனப்படும் அரபுலக ஸலபிய சிந்தனை கொண்டவர்கள் தோற்றம் பெற்றார்கள். அவர்களது சிந்தனைகளால் கவர்ப்பட்ட இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தௌஹீத் ஜமாஆத் தோற்றம் பெற்றது. இந்த ஜமாஆத் பல அரிய சேவைகளை செய்துள்ளன குறிப்பாக ஷிர்க்குகளுக்கு எதிராக பகிரங்க போர்க்கொடிதூக்கியவர்களாக இவர்களை சந்தேகமின்ரி சொல்லலாம். அதே போன்று மார்க்கத்தில் நுழைந்த (பித்அத்) புதியன வற்றை தக்கசான்றுகளுடன் நிறூபித்துக் காட்டினர். இதனால் சமூகத்தில் பல அசம்பாவிதங்கள் தோன்றியது உண்மையாயினும் ஷிர்க், பித்அத் களையப்பட வேண்டும் என்ற ரீதியில் அது தவிர்க்க முடியாதது என்றும் அவர்கள் கருதினர். இதனால் பல ஷிர்க்கான, பித்அத்தான விடயங்களில் இருந்து மக்கள் புரிந்து விலகிக்கொண்டனர்.

ஆனாலும் எல்லோருக்கும் இருப்பது போன்று இவர்களுக்கும் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சத்தியத்தை சொல்வதில் நிதானத்தை இழந்து செயட்படுகின்றனர். ஏனெனில் தௌஹீத் ஜாமாஆத் செயற்படும் எல்லா இடங்களிலும் சமூகத்துடன் மோதல் எற்படுகின்றது. ஒரு தவறை தடுக்கும், கண்டிக்கும் ஒழுங்கு இவர்களிடம் போனப்படுவதில்லை, தவறையே மார்க்கம் என்று கருதி அல்லது அரசியல் பின்னனியுடன் செயல்படும் ஒருவரை அல்லது சமூகத்தை ஒரு இரவில் மாற்றிவிட முடியாது, இது காய்ந்து வலைந்த குச்சியை நிமித்த முயலுவது போன்றதாகும் என்பதனை பலர் சுட்டிக்காட்டுவர்.

அவ்வாறே மற்றுமோரு குற்றச்சாட்டு இவர்கள் தமது கொள்கையுடன் ஒத்துப்போகாத அனைவரையும் பித்அத் வாதியகளாகவும், வழிகேடர்களாகவும், காபீர்களாகவும் காட்ட முனைகின்றனர் என்பது. இதில் சில உண்மைகள் இருப்பது தெரிகிறது. ஏனெனில் தௌஹீத் ஜமாஆத்தின் உருவாக்கப் பின்னனி அப்படியானது. அது தவறு என்று காணும் ஒன்றை நேருக்கு நேர் சந்திக்கும் பண்புகொண்டது. நேருக்கு நேர் எதிர்க்கும் தன்மை கொண்டது. காரணம் அது மார்க்கத்தில் தூய்மையை பேணவிரும்புகிறது. உண்மையில் ஸ்லாமிய இயக்கம், ஸ்லாத்தை பாதுகாக்கும் காவலர்களின் பண்பு இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது ஷாபி இமாம் அவர்களின் ஒரு கூற்றை மனதிற்கொள்வதுவும் சிறந்தது "எனது கருத்து சரியானது; அது பிழையாகவும் இருக்கலாம். பிரருடைய கருத்து பிழையானது; அது சரியாகவும் இருக்கலாம்" என்பது.

மற்றுமொரு பிரதான குற்றச்சாட்டு இவர்கள் சுன்னத்தான விடயங்களுக்கு அல்லது இரண்டு கருத்துகளுக்கு இடம்பாடான விடயங்களில் தமது ஒரு கருத்தை தினிக்க முற்படுகின்றனர் அல்லது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றனர் என்கிற அம்சம். இது நாம் காணுகின்ற ஒரு விடயமாகும். இதில் இவர்கள கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

இவர்கள் தொடர்பான மற்றிமொரு குற்றச்சாட்டு இவர்கள் அல்குர்ஆனையும், நபி வழியையும் மாத்திரம் பின்பற்றுவேம் என்ற கோசம். இது தொடர்பில் விமர்சகர்கள் கருத்து சொல்லும் போது, தப்லீஹ் ஜமாஆத்தினரது (தப்லீஹ் ஜமாஆத் - இவர்கள் பற்றிய விடயங்கள் பின்னர் தரப்படும்) கோசமான 'அல்லாஹ்வின் கட்டளை நபிகளாரின் வழிமுறை' என்று அவர்கள் தமது சில குறிப்பிட்ட விடயங்களுக்கு சொலதுபோல், தௌஹீத் ஜமாஆத்தினரும் தமக்கு சார்பான அல்லது தான் பின்பற்றும் கொள்கையுடன் தொடர்பான விடயங்களை பின்பற்றுவதை மாத்திரமே இவர்கள் அல்குர்ஆன், நபி வழி எம்று கூறுகின்றனர் என்பர். இக்குற்றச்சாட்டுக்கு இவர்கள் இலக்காவதற்கு முக்கிய காரணம். சில அல்குர்ஆன், நபி வழிகளை இவர்கள் மற்ற விடயங்கள் அளவுக்கு பேசாமையும் அவ்விடயங்களுல் காட்டும் அசிரத்தையுமாகும்.

உதாரணமாக
1. நபிகளார் 11 திருமணங்களை செய்தார்கள் (சில அரிவிப்புக்களில் 13) எப்படியோ ஒன்றுக்கு மேற்பட்டது. குராஆனும் முதலாவது இரண்டு திருமணங்களை பற்றியே பேசுகிறது. ஆனால் அவர்களிமல் அப்படி அனைவரும் அல்லது பெரும்பான்மையாகவாவது குறைந்தது இரண்டு திருமணங்களை செய்தவர்களை காணமுடியாது. அந்த சுன்னாவை பற்றி அவர்கள் கதைப்பதும் மிகக்குறைவு.
2. மதுவை தடை செய்யும் குராஆன் அதற்கு கட்டம் கட்டமாக குராஆன் வசனங்களை இறக்கியே தடை செய்தது, முழுக் குராஆனும் இறங்கி குடிவுபெர 23 வருடங்கள் எடுத்தன. அவ்வாறே சிலைகள் கஃபாவில் இருக்கும் போதே நபிகளார் அவர்கள் அதில் தொழுதிருகிறார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் தனது சமூகம் மாட்டை வணங்குவதை ஷிர்க் என்று கருதியும் பார்த்துக் கொண்டிருந்தை அல்குராஆன் குறிப்பிட்டுக் காட்டுகிறது எனினும் இவர்களிடம் தவறை திருத்துவதில் இந்த அல்குர்ஆன் நபிவழியும் பேனப்படுவதில்லை.
3. நபிகளார் அவர்கள் ஸ்லாமிய அரசை உருவாக்கி அதன் முதலாவது ஜனாதிபதியாகவும் இருந்தார்கள், தொடர்ந்து ஸஹாபாக்கள் கலீஃபாக்களாக இருந்தார்கள் இந்த நடைமுறையயும் இவர்கள் பேசுவதுல்லை இது குறித்து பேசும் ஜமாஆத்கள் (குறிப்பாக உலக அரங்கில் இஹ்வானுல் முஸ்லிமூன் மற்றும் இலங்கை, இந்தியா நாடுகளில் ஜமாஆத் இ ஸ்லாமி - இவர்கள் பற்றிய குறிப்புக்கள் பின்னர் தரப்படும்) இவர்களது வினர்சனங்களுக்கு உள்ளாகின்றன. ஸ்லாமிய அரசு என்கிற அம்சம் இவ்வளவு தெளிவாக இருந்தும் ஸ்லாமிய கிலாபத் 1924 வரை பெயரலவிலாவது இருந்தும் ஸ்லாத்தை நிலை நாட்டுவதில் இந்த நபிவழி பேனப்படுவதில்லை.
4. அறிஞ்சர்களை விமர்சித்தல் நபிகளார் (ஸல்) அவர்கள் காபீர்களின் கடவுல்களை கூட ஏசவேண்டாம் என்று சொல்லி இருக்கும் போது இவர்கள் தமது கொள்கைக்கு மாற்றமானவர்களை அல்லது மாற்றமாக கருத்து செல்பவர்களை கரசாரமாக தூற்றுகின்றனர். இதனால் ஸ்லாமிய பண்பாடுகளை அப்பட்டமாக உடைக்கின்றனர். அவர்களது குறைகளை சமூகத்தில் அனைத்து இடங்களிலும் சொல்லி அந்த அறிஞ்சரது மானத்தையும், கௌரவத்தையும் அழிக்க முயலுகின்றனர். உலகில் மிகப் பெரிய அறிஞ்சர்களை அந்த இயக்க ஆர்ப்பகட்ட அல்லது பாடசாலை மாணவன் கூட தூற்று அளவுக்கு நபிகளாரின் பண்பாடுகள் கேல்விக்குள்ளாக்கப்படிகின்றன இந்த நபிவழி பேனப்படுவதில்லை. 
இதுபோன்ற இன்னும் சில குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

எவ்வாறு மத்ஹபை பின்பற்றும் குழுக்கள் இன்று வரை அதனை அப்படியே பின்பற்றிவருகிறார்களோ அவ்வாறே இந்த ஸலபிகளும், தௌஹீத் ஜமாஆத்தும் ஷிர்க், பித்அத் போன்றவற்றை எதிர்த்தல் அதனூடாக மாத்திரம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும் தூய ஸ்லாத்தை பின்பற்றல் என்ற விடயத்தில் இன்றுவரை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாரு தௌஹீத் பேசும் தௌஹீத் ஜமாஆத் இன்று 10க்கும் மேற்பட பல பிரிவுகளாக பிரிந்துள்ளது பாரிய விமர்சனத்துக்குறியது. இவர்களது இந்த பிரிவுகளுக்கு இவர்களது கடும்போக்கும், பண்பாடுகள் பற்றிய பயிற்சி இன்மையும் முக்கிய காரணங்களாக குறிப்பிட முடியும்.

Sunday, September 11, 2011




நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நோன்பு நோற்கக் கூடிய நாள் அதுதான் உங்களது நோன்புக்குறிய நாள்


 “மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. (ஆல இம்ரான்:103)


ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கட்டாயக் கடமையாகும்.இது அல்லாஹ்سبحانه وتعالى முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார அளவுகோல் பின்பற்றப்படுவதால்முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறுநாட்களில்(மூன்று நாட்கள் வித்தியாசம்)நிகழ்கிறது. அல்லாஹ்سبحانه وتعالىகுறிப்பிட்ட பகுதிஎன்று எல்லையை பிரிக்காமல் முஸ்லிம்களுக்கு பொதுவாகவே கட்டளையிடுகிறான்.


 “நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது.(இதனால்) நீங்கள் இறையச்ச முடையோர்களாக ஆகலாம்.” (அல் பகரா:183)


இங்கு அல்லாஹ்سبحانه وتعالى நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செய்வதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்سبحانه وتعالىவிற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


 பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (அல் பகரா:189)


இவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ்سبحانه وتعالىகுறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும்.ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் பகுதி வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர். இந்த நிலையில் யஹூதி நஸாராக்களை பின்பற்றாமல் இருப்பதற்கு நாம் எமக்கே உரிய ஹிஜ்ரிக் கலண்டரை சிறந்த முறையில் வடிவமைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

நபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

பிறையை பார்த்து நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்;பிறையை பார்த்து நோன்பை நிறைவு செய்து கொள்ளுங்கள்.மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (அபூஹுரைரா(رضي) ,முஸ்லிம் )


 “பிறையை பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையை பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (இப்னு உமர் (رضي), புகாரி)


இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (عام) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (صوموا) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (رؤية) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும்.

மாதங்களை சரியாக கணக்கிட வேண்டும்


 “ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் எனநபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்”. (அபூஹூரைரா (رضي), திர்மிதி)


எனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் ரமளான் மாதத்தின் ஆரம்ப நாளையும் இறுதி நாளையும் முஸ்லிம்கள் தெளிவாக அறிந்து ஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும்.

பிறையை பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி صلى الله عليه وسلمஅவர்கள் முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள்.

 “ நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி صلى الله عليه وسلم அவர்கள்அந்த நபரிடம் நீங்கள் முஸ்லிமா என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள்,அல்லாஹூ அக்பர்! பிலாலே ! நாளை நோன்பு நோற்குமாறு மக்களுக்கு அறிவிப்பு செய்வீராக என்று கூறினார்கள். ” (இப்னு அப்பாஸ் (رضي), அபூதாவூது)


இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி صلى الله عليه وسلمஅவர்கள் அந்த நபரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை.

பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர்(அந்த பகுதியை ஒட்டி வாழ்ந்தாலும்) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஷரியாவிற்கு மாற்றமான பாவமான காரியமாகும்.

சந்தேகத்திற்குரிய நாள்

 “நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி صلى الله عليه وسلمஅவர்கள்தடை விதித்தார்கள்”. (ஆயிஷா (رضي), முஸ்லிம்)


 “யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு மாறு செய்விட்டார்”. (அம்மார் (رضي), புகாரி)


நபி صلى الله عليه وسلم அவர்களும், முஸ்லிம்களும் நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும்  தடுக்கப்பட்ட காரியத்தை செய்து வருகிறோம்.

 “நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். நபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”. (அபூமஸ்வூத் அல்அன்ஸாரி (رضي), தாரகுத்னி)


 “மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் வந்து,நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினர்.நபி صلى الله عليه وسلم நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுமிடத்திற்கு செல்லுமாறும் அவர்களுக்கு  கட்டளையிட்டார்கள். (அபூஉமைர் (رضي), அபூதாவூது, அஹ்மது, தாரகுத்னி)


இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள أَمَرَهُمُ என்ற வார்த்தைக்கு வாகன கூட்டத்திற்குத்தான் நோன்பை விடுமாறு ஏவியதாகவும் ,மேலும் மறுநாள் அவர்களது தொழுகை இடத்திற்கு செல்லுமாறு நபிصلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டதாகவும், நபிصلى الله عليه وسلم அவர்களும் சஹாபாக்களும் நோன்பை விடவில்லை என்றும் சிலர் நவீன விளக்கமளிப்பது அறியாமையின் வெளிப்பாடாகும்.

வெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்திற்கு பின்னர் இப்னுஅப்பாஸ்رضي الله عنه காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 “உம்முல் பழ்ல் رضي الله عنها என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் رضي الله عنه என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையை பார்த்தோம் என்றேன். நீயே பிறையை பார்த்தாயா? என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா? என்றேன். அதற்கவர்கள் போதாது நபி صلى الله عليه وسلم அவர்கள் இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள். (குரைப், முஸ்லிம்)


இது இப்னு அப்பாஸ்رضي الله عنه அவர்களின் இஜ்திஹாத் ஆகும். ஆனால் நபி صلى الله عليه وسلمஅவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது.

இதை இமாம் ஸவ்கானி رحمه الله உறுதி செய்கிறார்கள். அவர் தன்னுடைய நைலுல் அவ்த்தார் என்ற நூலில் இதுபற்றி தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
: وَاعْلَمْ أَنَّ الْحُجَّة إِنَّمَا هِيَ فِي الْمَرْفُوع مِنْ رِوَايَة اِبْن عَبَّاس لَا فِي اِجْتِهَاده الَّذِي فَهِمَ عَنْهُ النَّاس وَالْمُشَار إِلَيْهِ بِقَوْلِهِ ” هَكَذَا أَمَرَنَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ ” هُوَ قَوْله ” فَلَا نَزَال نَصُوم حَتَّى نُكْمِل ثَلَاثِينَ ” وَالْأَمْر الْكَائِن مِنْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ هُوَ مَا أَخْرَجَهُ الشَّيْخَانِ وَغَيْرهمَا بِلَفْظِ ”
ஏற்றுக் கொள்ளத்தக்க தெளிவானஆதாரம் இப்னுஅப்பாஸ்رضي الله عنه அவர்கள் அறிவித்த நபி صلى الله عليه وسلمஅவர்களின் மற்ற ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்கிக்கொள்வது போல் அவரது இஜ்திஹாதிலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னுஅப்பாஸ்رضي الله عنه அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி صلى الله عليه அவர்கள் கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ (அல் பகரா:185)


 என்ற வசனத்தை திரித்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படவே செய்யும்.

 “யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது)


என்ற நபி صلى الله عليه وسلمஅவர்களின் எச்சரிக்கையை சமர்ப்பிக்கின்றோம். குர்ஆனில் ஹுகும் மாற்றப்பட்ட வசனங்களான ; நாஸிக் ناسخ (மாற்றக்கூடியது), மன்ஸூக் منسوخ (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. அல் பகரா:184 வசனம் மன்ஸூக் منسوخ ஆகும். அல் பகரா:185 வசனம் நாஸிக் ناسخ ஆகும். தப்ஸீர் இப்னு கஸீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது அல் பகராவின் 184,185 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (فدية) செய்து வந்தனர். எனவே தான்
وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
“நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை அறிந்து கொள்வீர்கள்”)
என்பதாக அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான்.அதன்பின் இச்சட்டத்தை மாற்றி
فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
அந்த மாதத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக யாராவது இவ்வசனத்தை திரித்துக் கூறினால் அது வழிகேடாகும்.

 “நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (அல் பகரா:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (அல் பகரா :185) அருளப்பட்டது”. (சலமா பின் அக்வா(رضي ,புகாரி )
நாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும்.

 “இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்னும்) கறுப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.” (அல் பகரா:187)


இவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (امساك), நோன்பை நிறைவு செய்யும் நேரமும் (افطار) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப்படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும்.

வானியல் கணக்குஅடிப்படையில் துல்லியமாக கணிக்கமுடிகிறது

(அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா 2006.09.06 அன்று வெளியிட்டுள்ள பிறை தொடர்பான அறிக்கையிலும் வானியல் கணிப்பை ஏற்பதன் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்)


إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது; கணக்கிடவும் தெரியாது.மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்.அதாவது 29ஆகவோ 30 ஆகவோ இருக்கும். (இப்னு உமர்(رضي),புகாரி)


நபிصلى الله عليه وسلم அவர்கள் தங்களுக்கு கணக்கு தெரியாது என்று கூறிவிட்டார்கள் .அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடையவில்லை . ஆனால் இன்று பிறையை வானியல் கணக்குஅடிப்படையில் துல்லியமாக கணிக்கமுடிகிறது. எனவே வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு தேவைப்படின் பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை.

மத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.


ஷாபிஈ மத்ஹபை வளர்த்த இமாம்களில் ஒருவரான இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்).

முஹத்தப் என்ற நு}லுக்கு விளக்கமாக எழுதப்பட்ட  ஷாபிஈ மத்ஹபின் ஓர் பிக்ஹ் நு}லான மஜ்மூஃ என்ற நூலில் “எங்கள் ஷாபிஈ மத்ஹபில் ஒரு வகுப்பினர் எங்கு பிறை தென்பட்டாலும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். நானும் அதே கருத்திலேயே இருக்கிறேன்.” இவ்வாறு பிறை விடயத்தில் தனது நிலைப்பாட்டை இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார். 

ஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீرحمه اللهகுறிப்பிடுகிறார்கள்:-
முழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமானது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம்.

இமாம் ஜூஸைரி رحمه اللهஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது:-
ولا فرق في الشاهد بين أن يكون ذكرا أو أنثى، حرا أو عبدا، وإذا رآه واحد ممن تصح شهادته، وأخبر بذلك واحد آخر تصح شهادته، فذهب الثاني إلى القاضي؛ وشهد على شهادة الأول، فللقاضي أن يأخذ بشهادته، ومثل العدل في ذلك مستور الحال على الأصح، ويجب على من رأى الهلال ممن تصح شهادته أن
يشهد بذلك في ليلته عند القاضي إذا كان في المصر
1, எந்த ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லது பெண் ஆகியோர் பிறை பார்த்ததாக கூறினால், அவர் ஃபாஸிக் ஆயினும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. அவர் ஃபாஸிக் ஆனவரா? இல்லையா? என்பதை காஜி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார். (Fiqh al Madhaahib al Arba’a)

إذا ثبتت رؤية الهلال بقُطر من الأقطار وجب الصوم على سائر الأقطار لا فرق بين القريب والبعيد منها، أي لا عبرة لاختلاف المطالع مطلقاً
பிறை பார்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உதய வேறுபாட்டை கணக்கில் கொள்ளாமல் தொலைதூர வித்தியாசம் பாராமல் நோன்பு நோற்றாகவேண்டும்.
(பிக்ஹுல் இபாதா - ஹனபி மத்ஹப்)

يجب الصوم ويعم سائر الأقطار إذا ثبت الهلال بقطر منها، لا فرق بين القريب والبعيد من جهة الثبوت، ولا عبرة باختلاف المطالع مطلقاً
மற்ற நாடுகளில் பிறை பார்க்கப்பட்டு நோன்பு ஆரம்பித்துவிடுமானால் உதயவேறுபாட்டை பொருட்படுத்தாமல் தொலைதூர வித்தியாசமின்றி செயல்படுத்தியாக வேண்டும். (பிக்ஹுல் இபாதா -மாலிக் மத்ஹப்)

لَا عِبْرَةَ لِاخْتِلَافِ الْمَطَالِعِ فِي ظَاهِرِ الرِّوَايَةِ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ
தெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. (ஃபதாவா ஆலம்கீரி- ஃபதாவா காழிகான்)

இமாம் இப்னு தைமிய்யா رحمه الله குறிப்பிடுகிறார்கள்:-
“ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல்,நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும் (A1- Fatawa Volume 5, page, 111)

தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது கங்கோஹி رحمه الله :-
கல்கத்தா மக்களுக்கு வெள்ளிக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது.கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பின்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge - 336)

தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலா ஹழரத் رحمه الله உலகில் “எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும் என்பதாக கூறியுள்ளார்கள்……. (பாகியாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)

தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா:-
பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Vol 6, page - 380)

ஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (ரஹ்மத்துல் உம்மா)

ஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (அல்முஃனி, அன்இன்ஸாப்)

பிறையை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையை பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி صلى الله عليه وسلم அவர்களின் கட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும். (ஃபிக்ஹ் சுன்னாஹ்)

சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து அந்த தகவலை எற்று பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால்? கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர்(கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்களா?

நபி صلى الله عليه وسلمஅவர்கள் இத்தகைய தேசியவாத நோய் குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ
“எவர் ஒருவர் عَصَبِيَّةٍ அஸபிய்யாவிற்காக(தேசியவாதம் ,இனவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மரணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).

அவர் எந்த பகுதியை சார்ந்தவராயினும், பிறையை பார்த்து கூறிய தகவல் உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்று செயல்படுங்கள். அத்தகவல் அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் பகுதியிலிருந்து அல்லது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் சரியே. எனவே யாருடைய காலதாமதமான அறிவிப்பிற்காகவும் காத்திருக்கவேண்டாம். நீங்கள் நோன்பை நோற்பதும் அதை நிறைவு செய்வதும் அல்லாஹ்سبحانه وتعالىவின் திருப்பொருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். அல்லாஹ்سبحانه وتعالىவிற்கும் அவனுடைய தூதர் صلى الله عليه وسلمஅவர்களுக்கும் கட்டுப்பட்டு ஒரே உம்மாவாக செயல்பட அல்லாஹ்سبحانه وتعالى உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக.

وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான வேதனை உண்டு”. (ஆல இம்ரான் : 105)

இறுதியாக இந்த ஹதீஸைக் கவனியுங்கள் இது உங்களுக்கு பல தெளிவுகளை, விளக்கங்களைத் தரமுடியும். இன்றைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத்தரும் என நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்


"நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நோன்பு நோற்கக் கூடிய நாள் அதுதான் உங்களது நோன்புக்குறிய நாள், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெருநாள் எடுக்கக் கூடிய நாள் அதுதான் உங்களது பெருநாள்குறிய நாள், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குர்பானி கொடுக்கக் கூடிய நாள் அதுதான் உங்களது ஹஜ்ஜுப் பெருநாள்க்குறிய நாள்....."       (திர்மிதீ, பைஹகி, அபூதாவூத், நஸயீ)


அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.