சமூக மாற்றத்தை நோக்கி...

Sunday, June 12, 2016

இஸ்லாத்தின் பார்வையில் விளம்பரம்


இஸ்லாமிய வழிகாட்டல் முற்றுமுழுதாக அல்லாஹ்விடன் நன்மையை எதிர்பார்த்து செயற்படுவதையே வழியுறுத்துகின்றது, அதனையே போதிக்கின்றது. இதற்கு அல்குர்ஆனிலும், அல்ஹதீஸிலும் பல சான்றூகளைக் காணமுடியுமாக உள்ளன. தொழுகையாளிகளைப் பற்றிக் கூறும் போது,

''தொழுகையாளிகளுக்கு கேடுதான், அவர்கள் மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காகவே தொழுகின்றனர்'' (அல்குர்ஆன் 107:5,6) என்று குறிப்பிடுகின்றது. எனவே தொழுகையாக இருந்தாலும் அதனை பிறருக்கு காண்பிக்கும் நோக்கில் செய்வது கூடாது என்பதைவிடவும், அது பாரியதொரு பாவமாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவர்களுக்கு கேடு உண்டாகட்டும் என்று கூறும் அளவுக்கு பாரதூரமானது.

இஸ்லாத்தில் இஃலாஸ் என்னும் உளத்தூய்மை மிக முக்கியமானது. அது இல்லாமல் போகின்ற போது அதற்கு அல்லாஹ்விடத்தில் எந்த பெறுமானமும் இல்லாது போகின்றது. அதுமட்டுமன்றி அந்த நபரோ குழுவோ தோழ்வியையே தழுவுவார்கள். இதனை அல்குர்ஆன் கூறும் போது,

'அதை தூய்மைப்படுத்துகிறவர் வெற்றிபெற்றார், அதனை களங்கப்படுத்தியவர் தோழ்வியடைந்தார்' (அல்குர்ஆன் 91:9,10) என்று உள்ளத்தைக் குறிப்பிடுகின்றது.

இது பற்றி ரஸூல் (ஸல்) அவர்கள் குறீப்பிடும் போது,
'நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் அமலைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளவதில்லை' (நூல்: நஸாயீ)

மற்றொரு இடத்தில்,
'ஒருவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்தால் அவருக்காக அதனை அங்கீகரித்துக் கொண்டு அவரை சுவனத்தில் நுழைவிக்கின்றான்' (நூல்: அஹ்மத்)

எனவே ஒருவர் எவ்வளவுதான் பல நல்ல விடயங்களை செய்தாலும், எவ்வளவுதான் செலவிட்டாலும் உளத்தூய்மை என்ற அம்சம் இல்லாதுபோனால் அவை எத்தகைய பயனும் அற்றுப் போவதுடன், அல்லாஹ்விடத்தில் குற்றவாழியாகவும் மாறிவிடுகின்றான்.

இந்தப் பின்னனியி இருந்து இன்று தனி மனிதர்கள் அல்லது குழுக்கள் செய்யும் செயற்பாடுகள் பல தரப்பினராலும் விமர்சனத்திற்குள்ளாவது காணக்கூடியதாக உள்ளதுடன், இந்த விமர்சனம் ஒரு வகையில் நியாயமானதும் தான். இந்த கட்டுரை எழுதக் காரணமானது இதுபோன்ற சில விமர்சனங்களின் வெளிப்பாடேயாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையின் பல பாகங்களையும் மழை வெள்ளம், மண் சரிவு என்பன பாதித்தன. இச்சந்தர்ப்பத்தில் பல தனி நபர்கள், இயக்கங்கள் வழக்கம் போன்று தமது சமூக சேவைகளை உடனடியாக ஆரம்பித்தன.

இந்த சுய ஊக்கம் பாராட்டத்தக்கது, தேவையானதுமாகும், இவர்களால் பல ஆயிரம் போர் பயன்பெற்றமை மறுப்பதற்கில்லை. முன்வைக்கப்படும் விமர்சனம் என்ன வென்றால் இவ்வாறு செயற்பட்ட இயக்கங்கள் தமது பெயரை முன்னிருத்தி பதாகைகள் (Banners), தமது பெயர் பதித்த டீ சேர்ட்டுக்கள் (T-Shirts) போன்றனவற்றை காட்சிப்படுத்தி களத்தில் குதித்திருந்தனர். இது இஃலாசுக்கு முறனானது, இது அவர்களின் பெயரை பரப்பும் செயல்..... என்பதாகும்.

மேற்குறித்த அல்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள பார்க்கும் ஒருவர் இந்த சிந்தனையை நன்றாக புரிந்துகொள்வார், ஆனாலும் இதனை சற்று ஆலமக நோக்கவேண்டியுள்ளது, இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது,

'நீங்கள் செய்பவற்றை என் இறைவன் நன்கறிபவன்' (அல்குர்ஆன் 26:188) என்று ஒரு இடத்தில் கூறுகின்றான். இந்த வசனம் வெளிப்படையாகவே சொல்கின்றது, ஒருவர் செய்யக் கூடிய செயலை, அதன் உண்மைத் தனைமையை, அவரது நோக்கத்தை..... இதுபோன்ற இன்னோரன்ன விடயங்களை அல்லாஹ் அறிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவன். எனவே அவரவர் செயல் வெளிப்படையாகவே மறைமுகமாகவோ எப்படி இருந்தாலும் அது அல்லாஹ்வுக்கு பிரச்சினைக் குறியதல்ல என்பது.

அதேபோன்று பிரபலமான ஹதீஸ் ஒன்றில் 
'எண்ணத்தை பொருத்தே செயல்கள் அமைகின்றன' (நூல்: முஸ்லிம்) என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள். ஏன் இமாம் அவர்கள் இதனை இந்தத் தலைப்பில் பதிந்தார்கள் என்பது எமக்குத் தெரியாத போதும், அரசியல் என்பதில் விளம்பரம் அல்லது பிரச்சாரம் என்ற அம்சம் காணப்படும். அதே நேரம் அரசர்கள், அரசியல் வாதிகள் இயல்பாகவோ அல்லது இன்னொருவராலோ விளம்பரப்படுத்தப்படுவார்கள். அல்லது அவர்கள் செய்கின்ற நல்ல அல்லது மோசமான செயல்களால் அவர்கள் விளம்பரப்படுத்தப்படுவார்கள். விளம்பரப்படுத்துவது அவசியமானதாகவும் காணப்படுகின்றது, இல்லாதபோது மக்களிடத்தில் இருந்து மறைந்து மறந்து போய்விடும் அபாயம் காணப்படுகின்றது. இவ்வாறு எந்த வகையிலோ அவர்கள் விளப்பரப்படுத்தப்படுவார்கள் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான கூலி மறுமையிலும் கிடைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களின் நீய்யத் எனப்படும் எண்ணம் நல்லதாக இருக்கவேண்டியது கட்டாயமாகும். அங்கு முகஸ்துதி அறவே கூடாது, என்பதை இந்த இடத்தில் பதிவதன் நோக்கத்தை நாம் அணுமானிக்க முடியுமாக உள்ளது.

மற்றொரு ஹதீஸில்,
'அல்லாஹ்வின் பாதையில் போராடுபவரின் நிலையானது, - உண்மையாகப் போராடுபவர் யார் என்பது அல்லாஹ்வுக்கே தெரியும்' (நூல்: புஹாரி) என்று குறிப்பிடுகின்றார்கள். பொராட்டத்தை மறை முகமாக் செய்ய முடியாது. அதற்காக போர்க்களம் சென்றாக வேண்டும். இந்த விடயத்திலும் அவர் சிறந்த முறையில் போரிட்டால் அவர் அடையாளப்படுத்தப்படுவார். அதேனோரம் போர்க்களத்தில் குறிப்பிட்ட படை வீரர் எந்த அணிக்குறியது? எதிரியா? எமது வீரரா? என்பவற்றை அறியவும் அவர் அடையாலப்படுத்தப்படுவது கட்டாயமாகின்றது. எனவே அந்த நபரின் செயலை இஃலாசுக்கு முறனானது என்று இதுவரை யாரும் சொன்னதில்லை.

அதேபோன்று, 'நிச்சயமாக அல்லாஹ் உங்களின் (புறத்) தோற்றங்களையோ உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான்' (நூல்: முஸ்லிம்) என்ற ஹதீஸ் மற்றுமொரு விடயத்தையும் சொல்கின்றது, இப்படி எமது பாசையில் சொல்வோமாயின் அதாவது ஒரு செயலை செய்யக்கூடியவரது வெளித்தோற்றத்தை; அவர் இயக்கக் கொடியுடனா, இயக்க பெயர் பதித்த டீ ஷேர்ட், தொப்பியடனா, பெனர்களுடனா வேலை செய்கிறார் என்று பார்ப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு செயலை ஒருவர் செய்கிறார் எனில், அந்த செயல் நல்லதா? தீயதா? அவனது உள்ளம் இந்த விடயத்தில் எப்படி உள்ளது என்றே பார்க்கிறான். எனவே இந்த ஹதீஸ் தெளிவானது புறத்தோற்றம் எந்த வகையிலும் முக்கியமில்லை என்பதற்கு.

இது இப்படி இருக்கும் நிலையில் சிலர், சிலர் மீது, சில ஜாமாஆத்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு காரணமாக இல்லாத பொல்லாத விடயங்களை எல்லாம் பரப்பிவிடுகின்றனர். அவை அதிகாமானவை வதந்திகளாகவும், இன்னும் ஒரு பகுதி அவதூராகவுமே இருக்கின்றது. இந்த நிலை மிகப் பாரதூரமானதாகும் என்பதை ஒரு கனம் அத்தகையவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இல்லாத போது அது அவர்களை நன்மைகளை அழித்துவிடும், அவர்களது மறுமை வாழ்க்கையையும் பாதித்துவிடும்.

இது பற்றி அல்லாஹ் அல்குர் ஆனில் கூறும் போது, 'குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்' (அல்குர்ஆன் 104:1) என்று தெளிவானதொரு எச்சரிக்கையை விடுக்கின்றான்.

அத்துடன், ‘மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்’. (அல்குர்ஆன் 49:12) புறம் பேச வேண்டாம். அது நஜீஸானது எனவும் குறிப்பிடுகின்றான்.

மற்ற அம்சம் இந்த வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து நிவாரன செயற்பாடுகள் என்பது ஒரு முக்கியமான, அத்தியவசியாமான தேவை அதன் அவசியம் பாதிக்கப்பட்டவர்களை தவிர ஏனையோயால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத உணர்வு. இந்த சந்தர்ப்பத்தில் யாரு யாரும் உதவி செய்யமாட்டார்களா என்று மக்கள் ஏங்கும் நேரம், எனவே அந்தகைய அவர்களுக்கு எத்தகையவராயினும் உதவிசெய்வதுதான் அவர்களது தேவையே தவிர எமது விமர்சனங்கள் அல்ல, விமர்சனங்கள் அந்த உதவிகளை வீணடிக்குமே அன்றி இல்லை.

அத்துடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் களத்தில் செயற்படுபவர்கள் யார் என்பது அறியப்படுத்தப்படுவதும், விளம்பரம் செய்யப்படுவதும் மிக அவசியாமானதாகவும் காணப்படுகின்றது. காரணம் என்னவென்றால், 
பாதுகாப்பு: யாரோ வந்து ஏதோ கொடுத்துவிட்டுப் போகிறார்கள், அதனை உற்கொண்டவர்களுக்கு சுகயீனம் ஏற்படுகின்றது என்றால், தமது பொருற்களை சூரையாடுகிறார்கள் என்றால் அந்த பொருளை யார் கொடுத்தது? யார் வந்து போனார்கள்? என்பது தொரிந்தால் தான் விசாரிக்க முடியும், ஏனையவர்களை அறிவுறுத்த முடியும். இது ஒரு உதாரணம் மட்டுமே
சரியான முறையாக்கத்திற்கு: ஒரு குழு இயங்கி இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு தமது பிரச்சினைகளை சொல்வதற்கு உத்தியோக பூர்வமான ஒரு செயற்பாடு இருக்கவேண்டும். இல்லாத போது அனைவரும் அதில் தலையை நுழைப்பதன் மூலம் அந்த விடயம் சிக்கலாகி, பாரதூரமானதாகிவிடும்.
சுட்டிக் காட்டுவதற்கு: ஒரு குழு எல்லை மீறி செயற்படிகின்றது, ஒரு தலைப்பற்சமாக மக்களை வழிந்டாத்த முறபடுகின்றது என்றால் மக்கள் அவதிப்பட் நேரிடுகின்றது. இந்தகைய சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தால் இந்தகையவர்கள் தான் என்று செல்லமுடியுமாக இருக்கவேண்டும்.

இப்படி விளம்பரத்தின் அவசியத்தை உணர்த்தலாம். விளம்பரம் இல்லாமல் செயற்படுபவர்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்.


விளம்பரம் அடுத்தவர்களையும் நன்மையின் பால் தூண்ட செய்கின்றது. அதானால் நபிகளார் ஸல் அவர்களை சஹாபாக்களை பலர் முன்னிலையிலே பாராட்டியுள்ளார்கள், அவர்களது செயலை சொல்லிக் காட்டியுள்ளார்கள். இது கூடாது என்றிறுந்தால் நபிகளார் ஸல் அவர்கள் இவ்வாறூ பகிரங்கமாக பாரட்டியிருக்க மாட்டார்கள். இதற்கு பல நூறு உதாரணங்களை பார்க்கலாம்,

ஒரு முறை கைஸ் கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்தார்கள். அவர்களிடம் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசிவிட்டு இறுதியாக அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களிடம் இரண்டு குணங்கள் இருக்கின்றன. அவ்விரண்டு குணங்களை அல்லாஹ் நேசிக்கின்றான். 1. அறிவாற்றல் 2. நிதானம் (நூல்:முஸ்லிம்)

''ஹஸனும் ஹுஸைனும் சுவர்க்க வாசிகளின் இளைஞ்சரணித் தலைவர்கள்'' (நூல்: அபூதாவூத்)

''(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்' என்று கூறினார்கள்''. நூல்: புஹாரி)

''உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்'' (நூல்: புஹாரி)

''நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை...." (நூல்: புஹாரி)

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்'' (நூல்: புஹாரி)

இவ்வாறு ஸஹாபாக்களின் சிறப்புக்கள் ஏராலம் ஏராலம். அவை பகிரங்கப்படுத்தப்பட்டதால் தான் இவற்றை நாம் அறிகின்றோம். இந்த விளம்பரங்களை யாரும் முஹஸ்துதி என்று கூறுவதில்லை.


எனவே இஸ்லாமிய சகோதரர்களே! நாம் முஸ்லிம்கள் இலங்கையில் சிறு பன்மையினர் என்ற வகையிலும் இன்னும் அதிகம் சிந்தித்தே செயற்படவேண்டும். அத்துடன் எமக்கு சரியாக தெறியாத விடயங்களிளே நாம் அதிகம் கருத்துப் பரிமாறுகின்றோம். இதுவும் அபத்தானது இது பற்றி அல்குர்ஆனில் கூறும் போது,
‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36) என்று கூறுகின்றான். இது மறுமையில் எமது ஹிஷாபை இன்னும் கடுமையாக்கக் கூடியதாகும்.

நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் (நூல்: புஹாரி) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை' (நூல்: திர்மிதி) என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

‘(முஃமின்கள்) வீணானதை செவியுற்றால் அதைப் புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 25:55)

ஒருவர் இன்னொருவரை ‘பாவி’ என்றோ ‘காஃபிர்’ என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? என தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப் பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் (நூல்: முஸ்லிம்) எனப் பகர்ந்தார்கள்.

எனவே விளம்பரம் என்பது இஸ்லாத்தின் பார்வையில் அடிப்படையிலே ஹராமான ஒன்றல்ல, அது அவரவர் எண்ணத்தைப் பொருத்ததாகும். எனவே இதனை கருத்திற்கொண்டு செயற்படுவோம் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

நயிம் சுக்ரி 
றம்புக்கனை.

Wednesday, April 27, 2016

சகோதரி தவக்குல் கர்மான்


 அன்மைக்காலத்தில் ஒரு பிரச்சினை போகுது என்னவென்று சொன்னால், மிதவாத இஸ்லாமிய சிந்தனையில் உள்ள இலங்கை ஜமாஆத் இ இஸ்லாமி யினால் நாடாத்தப்படும் மாவனல்லையில் உள்ள ஆயிஷா சித்தீகா பெண்கள் கலாசாலையின் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த தவக்குல் கர்மான் என்ற ஏமனை சேர்ந்த ஒரு பெண் போராளி பற்றியதாகும். 
தீவிர இஸ்லாமிய சிந்தனையில் உள்ள தௌஹீத் ஜமாஆத் ஐ சேர்ந்த பல பிரிவினர் இப்பெண்மணியின் ஒரு செயலை கண்டித்துகொண்டிருக்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர் இலங்கை வந்த சமயம் அவரை வரவேற்கும் நிகழ்வு ஒன்று களனி பல்கலையில் நடைபெற்றது. இதன்போது அவரை சிங்களவர்களது கலாசார முறைப்படி மேலம் கொட்டி, கொத்து விளக்கேற்றி அவர்கள் வரவேற்றார்கள். இந்த நிகழ்வில் கொத்து விளக்கேற்றும் சந்தர்ப்பத்தில் அவரும் ஒரு விளக்கேற்றினார். அத்துடன் அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். இதன்போது நடைபெற்ற நடன நிகழ்ச்சியிலும் அதன் இறுதியில் சிங்களப் பெண்களுடன் கைகோர்த்து நின்றார். இந்த சந்தர்ப்பங்களின் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் வெளிவந்தமையேயாகும்.
அந்த விடயங்களுடன் சேர்ந்து அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு போட்டோவும் விமர்சனத்திற்குற்பட்டது. அது என்னவென்றால் அந்த தவக்குல் கர்மான் அவர்கள் அன்னிய ஆண்களுடன் (குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை இன் பொதுச் செயலாளர் அவர்களுடன்) கைகுழுக்கும் போட்டோவாகும்.
இந்த விடயங்களில் கொத்து விளக்கேற்றும் நிகழ்வும், பான் கீ மூன் அவர்களுக்கு கைகொடுக்கும் நிகழ்வும் குறிப்பாக விமர்சனத்திற்குற்பட்டுள்ளது.
ஆனால் அவர்களை மேலம் கொட்டி அழைத்து சென்ற நிகழ்வு விமர்சனத்திற்குற்படவில்லை, மற்றும் இன்னும் பல....

இந்த விடயங்கள் குறித்து விமர்சனம் செய்யும் தௌஹீத் ஜாமாஆத்தினர்,
கொத்து விளக்கேற்றுதல் அந்நிய கலாசாரம் எனவே அந்த கலாசாரத்தை பின்பற்றியமை தவறு.
'யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவரே' என்ற நபி மொழிக்கமையவே இந்த விமர்சனம் நடைபேறுகின்றது.

ஆனால் ஒரு விடயத்தை சொல்லியாக வேண்டும் இந்த விமர்சனங்கள்; விமர்சனம் என்ற எல்லையைத் தாண்டி ஒருவரைப் பற்றிய புறம்பேசலாகவே மாறியுள்ளது அவதானிக்கத்தக்கது.

ஆனால் இந்த விமர்சனத்துக்கும் அவரது செயலுக்கும் இடையில் தொடர்பிருக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது. அது எப்படி என்றா கேற்கின்றீர். ஒரு கலாசாரத்துக்கு ஒப்பாகுதல் என்பதற்கும், அவர்களின் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளுதல் என்பதற்கும் இடையில் வித்தியாசம் இருப்பது நாமறிந்தது. உதாரணமாக எமது திருமண நிகழ்வில் பந்தல் கட்டி மனப்பெண்ணையும், மனமகனையும் அழங்கரித்து காட்சிப்படுத்தியிருந்தால், இதனை நாம் அந்நிய சமுதாயத்தை பின்பற்றல் எனலாம், அதேனேரம் மாற்றுமத திருமண நிகழ்வு ஒன்றிற்கு நாம் அழைக்கப்பட்டிருந்து அங்கு நாம் சென்று அவர்களை வாழ்த்திவிட்டு வருதல் அந்த சமுதாயத்தை பின்பற்றியதாகாது. இது தான் அந்த வித்தியாசம்.

அவ்வாறே அவர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள், அது அவர்களது கலாச்சாரம். இதனை நாமும் எமது நிகழ்வுகளில் அப்படி பார்த்தால் அது அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றியது மட்டுமன்றி இஸ்லாம் நேரடியாக தடுத்த விடயமுமாகும். இந்த நேரம் அவர்கள் எம்மையும் ஒரு நிகழ்வுக்கு அழைக்கிறார் (சில வேளை அழைத்தவர் பக்கத்துவீட்டுக் காரராக, ஒன்றாக தொழில் செய்பவராக........) அவர்கள் நாள் நட்சத்திரம் பார்க்கிறார்கள் என்று செல்லாமல் இருப்பதா? அப்படி சென்றால் அவர்களை பின்பற்றியது அல்லது ஆமோதித்ததாகுமா? சிந்திக்க.

அதேபோன்று அவர்களில் சிலர் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள், பிஸ்மில், குரான் ஓதி எதனையும் ஆரம்பிக்க மாட்டார்கள் என்ற நிலை இருக்கும் போது, இப்படியானவர்கள் எமது திருமணம் அல்லது வேறு ஒரு நிகழ்வுக்கு வருகிறர்கள் என்றால் அவர்களுக்காக எமது நடைமுறைகளை விட்டுவிட்டு நாம் எமது நிகழ்வை நடாத்துவதா? நாம் அப்படி செய்யமாட்டோம். ஏனெனில் அது எமது கலாச்சாரம், இஸ்லாமிய வழிகாட்டல். அதே நிலைதான் அந்நிய சகோதர சமூகத்தின் நிலையும்.

சிலர் காட்டும் இந்த கடினப்போக்கில் செயற்பட்டால் நிறைய விடயங்களில் நாம் முறண்பட வேண்டி ஏற்படும். உதாரணமாக
*தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றம் அல்லது மாகாணசபை அல்லது பிரதேச சபை இவறுக்கு தெரிவாகிறார் என்றால். அந்த இடங்களில் குரான் ஓதி ஆரம்பிப்பதில்லை. அது மட்டுமல்ல இஸ்லாம் தடுத்துள்ள சகுனம் பார்த்தல், நல்ல நாள் பார்த்தல் என்ற அம்சங்களின் பின்னர் தான் அவர்கள் அந்த நிகழ்வுகளை ஆரம்பிப்பார்கள். எனவே இங்கு சென்றால் அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம் என்று அங்கு செல்லாமல் இருப்பதா? அல்லது அங்கு சென்று இவை என்னால் செய்ய முடியாது என்பதா?
*தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் இசைக்கப்படும் (இங்கு இசை என்ற தெளிவின்மையும் உள்ளது) போது ஆடாமல் அசையாமல் தலையை நிமிர்த்தி நின்று அதற்கு மரியாதை செய்யவேண்டும். இது எமது கலாச்சாரத்துக்கு முறணானது இதனை நாம் செய்தால் அந்த சமூகத்தை பின்பற்றியதாகும் எனவே என்னால் முடியாது என்று சொல்வதா?
*போயா தினங்களில் அரச நிறுவனங்களில், வேலைத்தளங்களில் விடுமுறை வழங்கப்படும், நான் விடுமுறையை எடுக்கமாட்டேன் என்று கூறி நாம் மட்டும் வேலை செய்வதா? அப்படி ஒரு போதும் செய்யவும் மாட்டோம். அப்படி விடுமுறை எடுப்பது அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றியதாகும் என்பதா?

நாம் தமிழ் மொழி போசுகிறோம். இது தமிழர்களின் மொழியா இல்லையா? இது பற்றி என்ன சொல்லப்போகிறோம்? மொழி பிரச்சினை இல்லை என்றால் தொழுகையில் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாமே என்ற கேள்வி எழுவது நியாயம்?

இப்படி ஏராளம் ஏராளம்.

அடுத்து ஒரு வினா தொடுக்க நினைக்கிறேன். ஏனென்றால் சகோதரி தவக்குல் கர்மானை விமர்சிப்பதை அவதானிக்கும் போது, அது படுமோசம். அவர் ஒரு யூத கைகூலி, இஸ்லாமிய சமூகத்தை சீரழிப்பவர், அவர் வழிகேட்டில் இருப்பவர், மற்றும் சில வசனங்கள் அவரை தகாத நடத்தையுள்ள பெண்ணாகவும் சித்தரிக்கின்றன.
இப்படி பேசுவதற்கு, இன்னொரு சமூகத்தில் ஒரு விடயத்தை செய்தவர் நரகவாதியா? வழிகேடரா? அவரை இந்த நிலைக்கு இஸ்லாமிய ஷாரீஆ கொண்டுசெல்லுமா?

அப்படிப் பார்த்தால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்யவேண்டிவரும். அப்படி ஹிஜ்ரத் செய்து எந்த நாட்டுக்கு செல்வது?

'நான் நற்பண்புகளை பூர்த்தி செய்யவே அனுப்பப் பட்டுள்ளேன்' என்னும் நபிகளாரின் பொன்மொழி
'மார்க்கவிடயத்தில் உங்களுடன் பொரிடமலும், உங்கள் வீடுகளைவிட்டு உங்களை வெளியேற்றாமலும் இருந்த அத்தகையவர்களுக்கு நன்மை செய்வதையும், நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை' (60:8) என்ற அல்குரான் வசனம்

இங்கு நான் தீர்ப்புத்தர வரவில்லை. அது எனது வேலையும் அல்ல. ஆனாலும் என்னில் எழுகின்ற கேள்விகள் இவை? அவற்றை உங்கள் சிந்தனைக்கு இங்கு முன்வைக்கிறேன்.

சரி ஒரு வாதத்திற்கு அவர் கொத்து விளக்கேற்றியது பிழை என்று வைத்துக்கொண்டால். ஏன் எமது கண்கள் அவரது நல்ல பக்கங்களை காணத்தவறின. ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் பிழைகள் மழிந்திருப்பினும் ஒரு நல்ல விடயமேனும் இருக்கும். ஏன் அவரது நல்ல பகுதிகள் சுட்டிக்காட்டப் படுவதில்லை? அந்த அளவுக்கு எமது உள்ளங்கள் இறுகி விட்டனவா? வெறி பிடித்துவிட்டனவா?

இது பற்றி இவைபோதும் என்று நினைக்கிறேன். அடுத்து முக்கிய விடயம் ஆண்களுக்கு கைலாகு கொடுத்த விடயம்.
இந்த நிகழ்வை வைத்து மேலோட்டமாகப் பார்த்து இது கூடாது என்று சொல்லலாம்.
அதுவும் அவர் பாதையி செல்வோர் வருவோரிடம் எல்லாம் கைலாகு கொடுத்தாக நாம் அறியவில்லை.
அத்துடன் பெண்கள் விரும்பிய ஆடவர்களுக்கு கைலாகு கொடுக்கலாம் என்று சகோதரி தவக்குல் கர்மான் சொன்னதாகவும் இல்லை.
இந்த நிலையில் அதற்காக அவரை இந்தளவுக்கு மோசமாக சித்தரிக்கலாமா? யாரோருவர் எம்மிடம் வந்திருந்து அவர் ஒரு பிழை செய்கிறார். அதற்காக எம்மை அல்லது அந்த நபரை அழைத்து வந்தவரை மோசமாகப் பேசலாமா?

இந்தக் கேள்விகளுக்கு அப்பால், ஒரு தவறை அல்லது பிழையை இல்லாமல் செய்வதற்கோ அல்லது திருத்துவதற்கோ இஸ்லாம் அழகிய வழிமுறைகளை சொல்லித்தந்துள்ள நிலையில், இஸ்லாமிய பெயர் தாங்கிய தௌஹீத் ஜமாஆத் இவ்வாறு செய்திருப்பது வருந்தத் தக்கது மட்டுமல்ல இஸ்லாமிய சமூகத்தில் அல்லது இலங்கை முஸ்லிம் அமைப்புகளிடம் இஸ்லாமிய அறிவு, பண்பாடுகள் இல்லையோ! என்ற ஒரு மனப்பதிவை அந்நியவர்களிடமும் பிற நாட்டு முஸ்லிம்களிடமும் ஏற்படுத்தக் கூடிய செயலாகக் காணப்படுகின்றது.

சகோதரி தவக்குல் கர்மானை சந்தித்து அவரது செயலுக்கான காரணத்தை கேட்டிருக்கலாம். அல்லது இந்த விடயம் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு அப்பற்பட்டது என்பதனை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கலாம்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனிதர்களில் சிறந்த மூஸா அலை அவர்களுக்கு மிக மோசமான பிர்அவ்னுடன் சென்று எப்படி கதைக்க வேண்டும் என்று சொல்லும் அல்குரான் வசனம். நாம் இந்த வழிமுறைகளை விட்டுவிட்டு, இஸ்லாமிய பண்பாடுகளுக்கு அப்பால் சென்று இஸ்லாமிய வழிமுறைகளை போசுகின்றோம்! இது இஸ்லாமாகுமா என்ற வினாவை தவிர்க்க முடியாது எழுப்பவேண்டி ஏற்படுகின்றது.

இஸ்லாமிய சட்டவியலில் அடிப்படை நம்பிக்கைகளைத் தவிர அதிகமான விடயங்களில் இரண்டு, மூன்று கருத்துகள் ஹதீஸ்களிலே காணப்படுவது நாமறிந்தது. 
அதேபோன்று இந்த கைலாகு கொடுத்தல் விடயத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பதை சொல்லியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றேன்.

இந்தப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக அமைவதற்கு சில விவகாரங்கள் குறித்து வந்துள்ள ஹதீஸ்களை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டதில் ஏற்பட்ட குழப்பமும், மற்றது இலங்கையில் நான் காணும் இப்பிரச்சினை தொடர்பான முதன்மையான காரணம் ஜமாஆத் அல்லது இயக்க வெறி என்ற உணர்வாகத் தான் காணப்படுகின்றது.

அந்த ஹதீஸ்களை அவதானித்தால்,
1. "ஒருவர் தனக்கு ஆகுமாகாத பெண்ணொருவரை தொடுவதை (மஸ்) விட தலையில் இரும்பாலான ஊசியால் குத்தப்படுவது சிறந்ததாகும்" என்ற ஹதீஸ்
2. "...கண்ணின் விபச்சாரம் பார்த்தல்,... கையின் விபச்சாரம் தொடுதல்..." என்ற ஹதீஸ்
3. "நபியவர்கள் எந்த பெண்ணின் கையையும் தொட்டு பைஅத் செய்தது கிடையாது" என ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்

மேலே குறிப்பிட்ட மஸ் தொடர்பான முதலாவது ஹதீஸை பொருத்தவரை இந்த ஹதீஸின் ஆதாரபூர்வம் தொடர்பான விடயத்தில் அனைத்து முஹத்திஸீன்களும் ஒருமித்த கருத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
அத்துடன் இந்த ஹதீஸ் குறிப்பிடும் தொடுதல் என்பது இச்சையுடன் தொடுதல், தகாத நோக்கில் தொடுவதையே குறிப்பதாக அல்லாமா கர்ளாவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அதே போன்று இதில் இன்னொருவிடயம் கவனிக்கத்தக்கது. கைலாகுகொடுத்தல் என்பதுவும் தொடுதல் என்பதுவும் இரண்டும் இருவேறுபட்ட அம்ங்களாகும். எனவே இங்கு குறிப்பிடப்படும் தொடுதலை கைலாகுடன் தொடர்புபடுத்த முடியாது.

இரண்டாவது ஹதீஸை அவதானித்தால் பார்த்த உடனே விபச்சாரமா? அப்படி இல்லை, இதனை ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. முதல் பார்வை உனது இரண்டாவது பார்வை சைத்தானுடையது (அபூதாவூத்) என்று.
அத்துடன் இந்த ஹதீஸை முழுமையாகப் பார்த்தால் புரியும் இது சாதாரனமாக ஒரு விடயத்தை சொல்லிவிட்டுப் போக வந்த ஹதீஸ் அல்ல என்பது. இது ஒருவன் எப்படி விபச்சாரம் என்ற பாவத்தை நெருங்குகிறான் என்ற விடயத்தை கட்டம் கட்டமாக சொல்லும் ஒரு ஹதீஸ் ஆகும். இதில் வரும் தொடுதல் என்பது சாதரனமாக கைலாகு கொடுப்பதையோ, எந்த மோசமான உணர்வுகளும் இன்றி தற்செயலாக நடக்கும் ஒன்றையோ சொல்லவில்லை, மாறாக தெளிவாக தீய உணர்விடல் சம்பந்தப்பட்ட தொடுகையையே குறிப்பிடுகின்றது.


மூன்றாவது ஹதீஸை அவதானித்தால் இது பைஅத் என்னும் இஸ்லாமிய ஆட்சி தலைவருக்கு குடிமக்கள் வழங்கும் உறுதிப்பிரமாணமாகும். இதனை நபி ஸல் அவர்கள் பெண்களிடன் மூன்று முறைகளில் (வாய்மொழி, துணியிக்கு கீழால், நீர் நிரப்பிய பாத்திரத்தில் கையை இட்டு) பைஅத் வாங்கியுள்ளமை ஹதீஸ்களில் இருந்து நிரூபனமாகின்றது. இருந்த போதும் ஆயிஷா ரலி அவர்கள் ஒரு முறையையே அதிகமாக அறிவித்துள்ளார்கள்.

அத்துடன் இந்த ஹதீஸ் சொல்லும் மற்றொரு பிரதான அம்சம் நபி ஸல் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல பெண்களிடம் பைஅத் வாங்கியுள்ளார்கள். அவர்கள் பெண்களின் கையை நேரடியாக தொடாமல் மாற்று வழியைக் கையாண்டுள்ளார்களே தவிர - பெண்களுடம் கைலாகு கொடுப்பது, கையை தொட்டு பைஅத் வாங்குவது கூடாது ஹராம் என்று தெளிவாக சொல்ல முடியுமாக பல சந்தர்ப்பங்கள்  இருந்தும் அவர்கள் அப்படி ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்பது மிகப் பிரதானமானது, கவனிக்கத்தக்கது?

இது தவிரவும்
தபரானியில் அல்கபீர்-அலவ்ஸாத் பகுதியில் வரும் ஒரு ஹதீஸில் நபிகள் ஸல் அவர்கள் 'ஒரு துணியிக்குக் கீழால் பெண்களுடன் கைலாகு கொடுத்தார்கள்' என்று அறிவிப்பாளர் வரிசையுட இருப்பதாக அல் ஹைதமி குறிப்பிடுகின்றார் (இந்த ஹதீஸின் ராவிகளில் பின் ஹர்ப் என்பவர் பலவீணமானவர்) இதனை ஷெய்க் யூசும் இஸ்டீஸ் அவர்கள் தனது ஒரு பத்வாவில் குறிப்பிடுகின்றார்.

ஒரு பெண் வந்து தனது ஒரு தேவையை சொல்ல, அவளது தேவையை நிறை வேற்ற அப்பெண் நபிகளாரின் கையைப் பிடித்து தேவையான இடத்துக்கு அழைத்து செல்வார், தேவை முடியும் வரை அன்னார் அப்பெண்னின் கையை விடமாட்டார் என்ற ஹதீஸ் அஹ்மத், இபுனு ஹிப்பான் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

அதேபோன்று நஸ்ப் அல்ரயா என்ற கிரந்தத்தில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸில் 'அபூபக்கர் ரலி அவர்கள் ஒரு வயோதிபப் பெண்ணுடன் கைலாகு கொடுத்தார்' எனப் பதியப்பட்டுள்ளதாக அல்ஸைலாய் குறிப்பிடுகின்றார்.

அதே போன்று மருத்துவத் தேவைகளுக்காக தவிர்க்க முடியாமல் ஆண்கள் பெண்களுடையதும், பெண்கள் ஆண்களுடையதுமான அங்கங்களை தொடவேண்டி ஏற்படுகின்றன. இந்த நிலையிலும் அதனை யாரும் ஹராம் என்று சொல்வதில்லை என்பதற்கு அப்பால் அதனை வரவேற்கின்றோம்.

அதேபோன்று ஒரு சில பெண் மகப்பேற்று வைத்தியர்கள் இருந்த போதும் எமது மனைவிமாரை அவர்களிடம் பிரசவத்திற்கோ, பரிசோதனைகளுக்கோ அவர்களிடமே அழைத்து செல்வதில்லை, எமக்கு நம்பிக்கையான, வசதியான, அன்மையில் உள்ள வைத்தியரிடமே அழைத்து செல்கின்றோம். இதில் ஹலால் ஹராம் பற்றி யோசிப்பதே இல்லை.

மகப்பேற்று மருத்துவரிடம் அழைத்து செல்வது ஆண்களுக்கு கைலாகு கொடுப்பதைவிடவும் மிகப் பாரதூரமானது என்பதை உரியவர்கள் அறிவார்கள்.

இந்தகைய விடயங்கள் இருக்கின்றமையை இந்த விமர்சகர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமானது தான்.
எனவே இத்தகைய பல விடயங்கள் இருக்கின்ற நிலையில் கண்னை மூடிக்கொண்டு படுமேசமாக விமர்சித்தல் பிழையானது மட்டுலல்ல எம்மை நரகில் கொண்டுசேர்க்கும் செயலுமாகும்.
அல்லாஹுஅஹ்லம்.

ஒரு ஹதீஸைக் கூறி நிறைவு செய்கிறேன். 'ரஸூல் ஸல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் 'யாருக்கு நரகம் ஹராமானதோ, யார் நரகத்துக்கு ஹராமோ அப்படியானவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?, மக்களுக்கு நெருக்கமான, இணக்கமான, மென்மையான ஒவ்வொரு மனிதருமாகும்' (திர்மிதி 2488, 2676)

அல்லாஹ் நாம் அனைவரதும் பாவங்களை மன்னித்து, பொருந்திக்கொள்வானாக. 

Friday, July 13, 2012

கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இஸ்லாமிய ஆட்சி


     நடைமுறையில் ஒரு செயலை செய்வதற்கும் அது குறித்த கோட்பாட்டை பேசுவதற்கும் இடையிலான வேறுபாடு மிகவும் பாரியது. ஜிஹாதை பற்றி ஆயிரம் குத்பாக்கள் செய்வதைவிட ஒருகணம் போராடுவது கடினம். இதுதான் யதார்த்தம்.

   இன்று இக்வான்கள் வசம் எகிப்தின் ஆட்சி கிட்டியுள்ள நிலையில் பலரும் இஸ்லாமிய ஆட்சி குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் கடந்த எட்டு தசாப்தங்களாக இஸ்லாமிய தனித்துவத்தை பாதுகாக்க இக்வான்கள் குதித்த ஜீவமரணப் போராட்டதை எகிப்து மக்களே நன்கறிவர்.

   ஆனால் இஸ்லாமிய ஆட்சியை உடனே கொண்டு வரவேண்டும் எனகுரல் கொடுப்போர் கொடுங்கோல் ஆட்சி தலை விரித்தாடிய போது மௌனித்து வாய்மூடி வெறும் பிக்ஹு சட்டங்களுக்குள்ளால் மட்டும் தமது “தாவா” “பணியை சுருக்கி இருந்தமை மிக அண்மித்த வரலாறாகும். 2011 ஆம் ஆண்டு வரை தேர்தலும்,ஆர்ப்பாட்டமும் ஹராமென கூறி இபாதத் பகுதியில் மட்டும் தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்த இஸ்லாமிய அமைப்புகளின் வரலாறு மறக்கவோ மறைக்கவோ முடியாத மிக அண்மித்த வரலாறாகும் .ஐந்து நேரம் பள்ளியில் தொழுவது குற்றமாக பார்க்கப்பட்ட சர்வாதிகார யுகத்தில் ஆட்சியாலனை எதிர்த்து பேசுதல் என்பது கனவில் கூட பெரும்பாலனவர்கள் நினைக்காத ஒருவிடயம். இங்குதான் இறைத்தூதர் ஸல் அவர்களின்
“அநியாயக்கார ஆட்சியாலனுக்குமுன்னால் சத்தியத்தை உறைப்பது மிகச்சிறந்த ஜிஹாத்” (முஸ்னத் அஹ்மத்:3/19) என்ற பொன்மொழியின் சரியான அர்த்தத்தை புரியமுடிந்தது.

   எனவே குலைநடுங்கும் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து பெரும் இஸ்லாமிய சாத்வீக போராட்டமொன்றை நடாத்திய இக்வன்களின் சிந்தனையில் இஸ்லாமிய ஆட்சி குறித்த தெளிவான பார்வையும் அதனை வழிநடாத்த தகுதியான நூற்றுக்கணக்கான அறிஞர்களும் இருப்பதை சிலர் அறியாமல் இருக்கலாம். எனவே மேலோட்டமாக இணையத்தலங்களில் அல்லது பொதுஊடகங்களில் ஒருசில செய்திகளை கேட்டுவிட்டு இஸ்லாமிய ஆட்சி தொடர்பில் இக்வான்களை விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும். இக்வவான்க்ளும் மனிதர்கள் என்றவகையில் அவர்களும் தவறுவிடக்கூடியவர்கள். அந்த தவறுகளை அறிவுபூர்வமாக ஆதரபூர்வமாக சுட்டிக் கட்டுவதே ஏற்புடையது. 

   இஸ்லாமிய ஆட்சி குறித்து பேசுவோர் பெரும்பாலும் மறந்துவிடும் முக்கிய அடிப்படை “ இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்று நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு மனித குழுமம்”  என்பதாகும். இக்வான்களின் தாவா சிந்தனையில் “ இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்லும் பரம்பரையை உருவாக்கல் “என்பது முக்கிய அம்சமாகும். சட்டங்களின் அடியாக மட்டும் இஸ்லாத்தை நடைமுறைப்படுதமுடியும் என நினைப்பது இஸ்லாமிய ஆட்சி குறித்த தெளிவின்மையின் தவறாகும். மனிதனை மாற்றுவது சாதாரண விடயமல்ல. எனவே மனித உள்ளங்களின் மாற்றமே இஸ்லாம் எதிர்பார்க்கும் மாற்றமாகும். இது அல்குர்ஆனின் அடிப்படை கருத்தாகும். ( எந்த ஒரு சமூகமும் அவர்களது உள்ளங்களில் இருப்பவற்றை மாற்றி கொள்ளாத வரை நிச்சியமாக அல்லாஹ் அந்த சமுகத்தை மாற்றமாட்டான் ) ( சூரா அர்ராத்:11) எனவே இதுதான் சமுக மாற்றதின் அடிப்படையாகும்.

   இந்த மாற்றம் படிப்படியாக இடம்பெறக்கூடியது என்பது அல்லாஹ்வின் நியதியாகும். இறைத்தூதர் ஸல் அவர்களின் சீராவில் இருந்து நாம் படிக்கும் முக்கியபாடமும் இதுவாகும். 23 வருடங்களாக அல்குர்ஆன் படிப்படியாக இறக்கப்பட்டமை இதனை தெளிவாக சுட்டி நிற்கிறது.

   இந்தப்பின்னணியில் இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைப்படுத்துவதில் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட மனித குழுமமும் , படிப்படியான நடைமுறையும் முக்கிய அடிப்படைகளாகும். இன்று இக்வான்கள் ஆட்சியை அடைத்திருக்கிறார்கள் என்றால் அது சுமார் 85 வருட கட்டம் கட்டமான, நீண்ட பயணத்தின் விளைவாகும். இதுதான் யதார்த்தம். அந்த நீண்ட பயணத்துக்குப்பின்னால் ஓர் ஈமானிய பரம்பரையை உருவாக்குவதில் இக்வான்கள் வெற்றிகண்டனர். அதுவே அவர்களின் வெற்றியின் இரகசியமாகும்.

   இக்வான்களின் இவ்வெற்றி மற்றும் பல இஸ்லாமிய இயக்கங்களை பின்தள்ளிவிட்டது எனக்கூறுவது பொருத்தமல்ல. எனினும் இவ்வெற்றி மற்றும் பல இஸ்லாமிய இயக்கங்கள் அவற்றின் தாவா வழிமுறைகளை மீள்பரிசீலனை செய்யத்தூண்டியுள்ளது. இந்த வகையில் எகிப்தின் சலபிக்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்தமையை குறிப்பிடலாம். இது அவர்களின் அடிப்படை சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமா ? அல்லது யதார்த்த கள நிலவரம் திணித்த மாற்றமா ?என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

   அடுத்ததாக இக்வான்களின் இந்த வெற்றி நிச்சயம் ஹிஸ்புத்தஹ்ரீர் அமைப்பையும் அவர்களின் தாவா வழிமுறை குறித்து மீள்பர்சீலனை செய்ய தூண்டியிருக்கும். இஸ்லாமிய ஆட்சிதான் தமது இலட்சியம் என்றால் ,அதனை எங்கு? எப்படி ?யார்மீது ?நடைமுறைப்படுத்துவது என்பதற்கு ஹிஸ்புத்தஹ்ரீர் என்ன பதில் சொல்கிறது.? நவீன ஜாஹிலிய்யத் தலைவிரித்தாடும் மேற்கு நாடுகளில் ( தாருள் குப்ர் )இஸ்லாமிய இயக்கங்களின் முதன்மை பணி என்ன? நான்கு சுவர்களுக்குள்ளால் இஸ்லாமிய ஆட்சி குறித்து பேசுவதா ? அல்லது அன்றாட வாழ்வில் தமது “ ஈமானை “ பாதுகாத்துக்கொள்ள ஜீவமரணப்போராட்டத்தில் குதித்துள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களின் ஈமானை பாதுகாக்க உழைப்பதா ?. எனவே இவ்விடயம் தொடர்பில் தெளிவான நிதானமான ஒரு முடிவுக்கு வருவதே முஸ்லிம் சமூகதுக்ககு மிகவும் பயனளிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

   இறுதியாக , உலகை வழிநடாத்த தகுதியான பரம்பரையை உருவாக்கும் சமூகத்துக்கே அல்லாஹ் ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுக்கிறான். என்பதுவே இஸ்லாமிய ஆட்சியின் பின்னணியில் உள்ள யதார்த்தமாகும்.
( BY:MOHAMED NISHAD – NALEEMI)

Thursday, June 7, 2012

கைகளை முத்தமிடுவது ஒரு பாவமா?



  இஸ்லாம் அன்பின் வாழ்க்கை நெறி. அது மனிதர்களுடன் மட்டுமல்ல ஏனைய உயிர் பிராணிகளுடனும் அன்பாக இருகக் வேண்டும் என்று வழியுருத்துகின்றது. இஸ்லாம் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை அதனை கடுமையாக மறுக்கின்றது.. அநியாயமாக ஒரு மரத்தை கூட வெட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. அதனால் தான் அன்னல் நபி (ஸல்) அன்பு நிறைந்தவர்களாக இருந்தார்கள். அனைவரையும் பரிவோடு பார்த்தார்கள். தாயிபில் அவர்களுக்கு சொல்ல முடியாத துண்பங்களைக் கொடுத்த அவர்களை அப்படியே மன்னித்தார்கள். மனிதர்களில் யாருமே நரகம் செல்லக் கூடாது என்பதில் மிகக்கரிசனை கொண்டார்கள். அவர்களை பார்த்து அல்குர்ஆன் கூறும் போது 

"இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்"  அல்குர்ஆன் 18:06 என்றம், மற்றுமோர் இடத்தில்

"முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்" அல்குர்ஆன் 3 : 159 என்றும் அல்குர்ஆன் கூறிக்கொண்டிருக்கின்றது.

அது மட்டுமன்றி நபிகளார் (ஸல்) அவர்களே கூரும் போது

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம், ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்" என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5055

இஸ்லாத்தின் அன்பு என்பதன் அளவைப் பாருங்கள் ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் கூறும் போது 'ஒரு கோவேறுக் கழுதை பாதையின் தடுக்கி விழுந்தாழும் இந்த உமர் விசாரனை செய்யப்படுவார்" என்று கூறிய அக்கூற்று எத்தகைய தன்மை கொண்டது?

எனவே சகோதரர்களே முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. ஒருவர் மீது அல்லது ஒரு உயிரின் மீது அல்லது ஒரு பொருளின் மீது அன்பு அதிகரிக்கும் போது கட்டி அனைத்துக் கொள்கிறோம், முத்தமிடுகிறோம். ஒரு தாய் தனது குழந்தைகளை அனைத்து முத்தமிடுவதை கண்டிருக்கிறோம் பல போது அனுபவித்துமிருக்கிறோம். இது மனிதனது இயல்பு மட்டுமல்ல ஏனைய உயிரினங்களும் தனது குட்டிகளை அன்பினால் அரவனைப்பதை, முத்தமிடுவதை அவதானித்திருக்கிறோம். இதனை ஒருபோதும் இஸ்லாம் தடை செய்யவில்லை அது மட்டுமல்ல நபிகளாரின் வாழ்வைப்பார்க்கும் போது அது போற்றப்பட்டிருப்பதை காண்கிறோம். இதற்கான சில ஆதாரங்களை பின்னர் தருகின்றோம்.

ஆனால் பெரியார்கள் என்று சிலரை எடுத்துக் கொண்டு பக்தி காரணமாக ஒரு வணக்கமாக நினைத்துக் கொண்டு கால்களை முத்தமிடுவதையும், அவர்களின் பாதங்களைக் கழுவி விடுவதையும் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்தால் அவரது ஆசி கிடைக்கும், இதனால் மறுமையில் பல அந்தஸ்துக்கள் கிடைக்கும் என்று நம்பி செயற்படுகின்றனர். இத்தகைய செயற்பாடுகளையே இஸ்லாம் தடைசெய்துள்ளது அது மட்டுமன்றி அத்தகைய செயல்களை வன்மையாக கண்டிக்கின்றது. இது மாற்று மதத்தவர்களின் கலாச்சாரம். இவற்றைப் பின்பற்றுவது மாற்றுமதத்தைப் பின்பற்றுவதைப் போலாகும்.

நபிகாரின் பக்கம் பார்வையை திருப்புவோமானால்..

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அன்னாரின் மகன்) இப்ராஹீம் வசித்து வந்த அபூ ஸஃப் என்பவரின் வீட்டுக்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால் குடித் தாயாரின் கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமை தூக்கி முகர்ந்து முத்தம் இட்டார்கள்.  ஆதாரம் புஹாரி 1303

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேரரான) ஹசன் பின் அலீயை முத்தம் இட்டார்கள். அப்போது அன்னாரின் அருகில் அமர்ந்து இருந்த அக்ரஉ பின் ஹாபித் அத்தமபீ (ரலி) அவர்கள் எனக்கு பத்துக் குழந்தைகள் இருக்கிறார்க்ள. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டது இல்லை, என்று கூறினார்கள். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், அன்பு காட்டாதவர், அன்பு காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள். ஆதாரம் புஹாரி 5997

ஆயிஷா ரலி கூறினார்கள் ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள். (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

பிரிதொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய போது, உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. எனது உள்ளத்தில் அப்படித்தான் தோன்றுகிறது. அவர் களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். (நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரைப் பார்த்து, கைகளையும் கால்களையும் துண்டிப்பேன் என்றும் சொன்னார்கள். (அப்போது எனது தந்தை) அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரை போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, அன்னாரின் (நெற்றியில்) முத்தமிட்டு, எனது தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பனம் ஆகட்டும்! நீங்கள் உயிரோடு இருந்தபோதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள்.  எனது உயிரைத்தன் கைவசம் மீது வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை சுவைக்கும்படி உங்களைச் செய்ய மாட்டான் என்று கூறிவிட்டு வெளியே வந்தார்கள். புகாரி 1241,1242,

நெருங்கிய நண்பர்களை சந்திக்கும் போதும், பிரியும் போதும் நெற்றியில் முத்தம் இடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு யுத்தகளத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த போது தனது கையில் இருந்த ஈட்டியால் குத்தி ஸஹ்த் (றழி) அவர்களை நேர்ப்படுத்தினார்கள். அப்போது நாயகமே நீங்கள் குத்தியது எனக்கு வழிக்கிறது என்றார். உடனே நபிகளார் (ஸல்) அவர்கள் தனது ஆடையை விலக்கிக்காட்டி ஈட்டியால் குத்தும்படி கேற்க. உடனே அந்த ஸஹாபி அவர்கள். ஈட்டியை வீசிவிட்டு நபிகளாரி வைற்றில் முத்தமிட்டார்கள். ஏன் இவ்வாறு செய்தீர் என்று கேட்டபோது, நான் இந்த யுத்தத்தில் இருந்து திரும்பிவருவேனோ என்ற சந்தேகம் ஒருக்கிறது அதனால் தான் இவ்வாறு செய்தேன் என்றார். (இப்னு ஹிஸாம்)

கணவன் - மனைவி

ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது (தமது துணைவியரை) முத்தம் இடுவார்கள்! நோன்பு நோற்று இருக்கும் போது கட்டி அணைப்பார்கள். ஆனாலும் அவர்கள், உங்களை எல்லாம் விட தமது உணர்ச்சிகளை அதிகமாக கட்டுப்படுத் திக் கொள்ளக் கூடியவர்களாக இருந் தார்கள்.  ஆதாரம் புகாரி 1928, முஸ்லிம்: 2020

தாம்பத்ய உறவுக்காக மட்டும் இன்றி, சாதாரணமாகவும் மனைவியரை முத்தமிடுவது நபிகளாரின் நடைமுறை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

ஜாபிர் (பின்) அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள்:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜாபிரே! திருமணம் முடித்துக் கொண்டாயா? என்று கேட்டார்கள். நன் ஆமாம் என்றேன். கன்னி கழிந்த (விதவைப்) பெண் ணையா? கன்னிப் பெண்ணையா? என்று கேட்டார்கள். (கன்னிப் பெண்ணை) அல்ல, கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மனம் முடித்துக் கொண்டேன்) என்று கூறினேன். கன்னிப் பெண்ணை மணம் முடித்து இருக்கலாமே, அவளும் நீயும் கொஞ்சிக் குலாவி இருக்கலாமே! என்று கூறினார்கள். உனக்கு என்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும், அவர்களின் உமிழ் நீரும் உமக்கு வேண்டாமா? என்று கேட்டார்கள். புகாரி: 4052, 5080 

அத்துடன் "நபி (ஸல்) அவர்களின் கைகளையும் கால்களையும் அப்துல் கைஸ் கூட்டத்தினர் முத்தமிட்டுள்ளனர். அதை நபிகளார் அங்கீகரித்துள்ளார்கள்" (அபூதாவூத்) இது தவிரவும் அபூதாவூத் (4548),ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என் நம்பிக்கையை அதிகமாக்கும் ஒரு விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுங்கள் என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மரத்தை அழை என்றார்கள். அவர் அழைத்தார். அந்த மரம் வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஸலாம் கூறியது. பின்னர், நீ சென்று திரும்பிச் செல் என்றார்கள். அது சென்று விட்டது. அப்போது அந்த மனிதர் தலையையும் காலையும் முத்தமிட அனுமதி கேட்டார். நபிகளார் அனுமதியளித்தார்கள். அவர் நபிகளாரின் தலையையும் காலையும் முத்தமிட்டார். புரைதா (ரலி), நூல்: ஹாகிம் (7326)

நாம் இந்த இறைத்தூதரிடம் சென்று (சில) கேள்விகளைக் கேட்டு வருவோம் என்று இரண்டு யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் கூறினார். அதற்கு அவர், நீ (அவரை) இறைத்தூதர் என்று கூறாதே! ஏனெனில் நீ இறைத்தூதர் என்று கூறியதை அவர் கேட்டுவிட்டால் அவருக்கு நான்கு கண்கள் வந்து விடும் (அதாவது அதிகம் பூரிப்படைந்து விடுவார்) என்று கூறி விட்டு நபிகளாரிடம் சென்றார்கள். நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது சான்றுகளை வழங்கினோம் (17:101) என்ற வசனத்தின் விளக்கத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒன்பது சான்றுகளையும்) விளக்கினார்கள்: 1. அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! 2. விபச்சாரம் செய்யாதீர்கள் 3. அல்லாஹ் தடை செய்த எந்த உயிரையும் நியாயம் இன்றி கொல்லாதீர்கள் 4. திருடாதீர்கள் 5. சூனியம் செய்யாதீர்கள்! 6. தவறிழைக்காதவனுக்கு எதிராக அவனைக் கொல்ல வேண்டும் என மன்னனிடம் முறையிடாதீர்கள்! 7. வட்டியை உண்ணாதீர்கள். 8. கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறாதீர்கள். 9. போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடாதீர்கள் என்று கூறிவிட்டு, சனிக்கிழமை வரம்பு மீறாதீர்கள் என்ற கட்டளை யூதக் கூட்டத்தினரே! இது உங்களுக்கு மட்டும் குறிப்பானதாகும் என்று விளக்கம் அளித்தார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த இரண்டு நபர்களும் நபிகளாரின் கைகளையும் கால்களையும் முத்தமிட்டார்கள். மேலும் நீங்கள் இறைத்தூதர் தான் என்று நம்புகிறோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்பதை தடுத்தது எது? என்று கேட்டார்கள். நபி தாவூத் (அலை) அவர்கள் தன்னுடைய சந்ததிகளில் நபி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். மேலும் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எங்களை யூதர்கள் கொன்று விடுவார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று பதிலளித்தார்கள். ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) ஆதாரம் திர்மிதி (2657, 3069), இப்னுமாஜா (3695)

இதுபோன்ற பல ஹதீஸ்கள் கைகளை முத்தமிடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காணப்படிகின்றன. அத்துடன் கைகளை முத்தமிடுவதை தடுக்கும் வகையில் எந்த அறிவிப்புக்களும் காணப்படவில்லை. எனவே தனது அன்புகுறியவர்களை அவர்களது கைகளை முத்தமிடுவது அன்பின் வெளிப்பாடாகுமே அன்றி அது இபாதத்தாக கருதாதவரை வழிகேடான அல்லது ஷிர்க்கான விடயமன்று. அல்லாஹ் எம் அனைவருக்கும் அனைவரையும் நேசிக்கும், அன்பு செலுத்தும் உள்ளத்தை தரட்டும். இதன் மூலம் இஸ்லாம் உலகின் அனைத்துத் திசைகளிலும் பரவட்டும். இது குறித்து போராசிரியர் ஷஹீத் செய்யித் குதுப் (றஹ்) அவர்களது வார்த்தையில் சொல்லவதானால் 

"ஒருவர் குறித்த அன்பும் கனிவும் எமது உள்ளத்தில் முலைக்கும்போது சுமைகளும் கஷ்டங்களும் உள்ளத்தைவிட்டும் நீங்கிவிடுகின்றன, அப்போது அவனைப் புகழ்வதற்கு முகஸ்துதி தேவையில்லை" (அஃராஹுர் றூஹ்) என்று அன்பு என்ற சாதனம் கொண்டு தஃவா செய்வது குறித்த ஒரு அழகான கருத்தை குறிப்பிடுகின்றார்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Sunday, May 6, 2012

முஸ்லிம்களும் அறிவியல் கலைகளும் (மருத்துவம்)


Ibnu Sina (Avicena)

 நபிகளார் (ஸல்) அவர்களின் தோற்றத்துக்கு முன்னர் ஹாரிஸ் பின் கல்தா என்பவர் அறேபியாவின் முதலாவது வைத்தியராகக் காணப்பட்டார். இவர் பாரஸீக ஜுந்த் சாபூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவராவார். இதுதவிரவும் சில மூட நம்பிக்கைகள் பரவி இருந்தன. அவை விஞ்ஞான பூர்வமாக இல்லாததால் நபிகளாரின் வருகையை அடுத்து அவை முக்கியத்துவம் இழக்கப்பட்டன.
 பின்னர் இஸ்லாத்தின் வளர்ச்சியின் போது அல்குர்ஆன் பல மருத்துவ விடயங்களை முன்வைத்தது. அத்துடன் சுத்தம் சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு இஸ்லாம் பாரிய முக்கியத்துவம் கொடுத்தது. இதன் காரணமாகவும் பிற்பட்ட காலங்களில் முஸ்லிம்கள் மருத்துவத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏதுவாக அமைந்தது எனலாம்.
உதாரணமாக:
" நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே.... (22:05)
".....இன்னும் தூய்மையாக இருப்போரையும் அல்லாஹ் நேசிக்கின்றான்" (2:222)
"...நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்" (2:172)
"....அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது" (16:69)
 இதுபோன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் முஸ்லிம்களின் சிந்தனைகளை தூண்டி எழுப்பின. இதனால் அவர்கள் ஆய்வுகளுக்கு சென்று பல புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பம் கிடத்ததுடன். உலக மருத்துவ துறைக்கு பெரும் வரப்பிரசாதமாகவும் அமைந்தது.
Ibnu an Naafis
  கி.பி 700 களுக்குப் பின்னர் அப்பாஸிய கலீபாக்களின் காலம் உலக மருத்துவ வரலாற்றின் முக்கிய காலமாக அமைந்ததற்கு காரணம் கலீபா மாமூனின் காலத்தில் பைத்துல் ஹிக்மா ஆரம்பிக்கப்பட்டதினூடாக பல மருத்துவ நூற்கள் அரபுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதற்கு உதாரணமாக அலி அத்தபரி, ஹுனைன் பின் இஸ்ஹாக், யூஹன்னா பின் மஸாவேஹ், ஜிர்ஜிஸ் பின் ஜிப்ரீல் பின் பக்ரிசு..... போன்ற அறிஞ்சர்களை குறிப்பிடலாம் அவர்கள் கல்ன், ஹிபோகிறடீஸ், போல் முதலான கிரேக்க மருத்துவ அறிஞ்சர்களின் நூற்களை மொழிமாற்றம் செய்தனர்.
 இதனை அடுத்து அலி அத்தபரி அவர்கள் தானது சொந்த நூல் ஒன்றையும் ஆக்கினார் இது 'பிர்தௌஸ் அல் ஹிக்மா' என்பதாகும்.  இது இன்றுன் காணக்கிடைக்கின்ற பழைய மருத்துவ நூலாகும். அவ்வாறே ஹுனைன் பின் இஸ்ஹாக் 'கிதாப் அல் மஸாயில் பில் ஐன்' என்ற கண் தொடர்பான நூலை எழுதினார். இதனை அடுத்து இந்த வளர்ச்சிகளின் விளைவாக அர்ராஸி, அலி இப்னு ஸீனா (Avicena), அலி பின் அப்பாஸ் போன்ற இஸ்லாமிய உலகின் புகழ் மிக்க அறிஞ்சர்கள் தோற்றம் பெற்றனர். முஸ்லிம்களின் மருத்துவ ஆற்றலுக்கு சான்று கூறும் ஒரு மருத்துவக் கலையாக யூனானி மருத்துவம் காணப்படுகின்றது.
 இதுதவிரவும், பல அறிய கண்டு பிடிப்புக்களும் காணப்படுகின்றன. உதாரணமாக, யூஹன்னா பின் மஸாவேஹ் கலீஃபா முஃதஸிமிடம் குரங்குகளை பெற்று பகுப்பாய்வு செய்து மனித உடலமைப்பு பற்றி கருத்து வெளியிட்டார். இந்த ஆய்வு முறை இன்றைய மருத்துவ விஞ்ஞானத்திலும் முக்கிய இடம் பிடித்திருக்கின்றது. கி.பி 11   நூற்றாண்டில் அப்துல் லதீப் அல் பக்தாதி என்ற ஆய்வாளர் கலனின் கருத்தை திறுத்தியமைத்து மண்டை ஓட்டில் 8 எழும்புகள் உள்ளன என்ற கருத்தை முன்வைத்தார்.
Ibnu Arrazi
 அதேபோன்று புரஹானித்தீன் தனது ஷரஹ் அல் அஸ்பாப் என்ற நூலில் இரத்தத்தில் திராட்சை ரசம் இருப்பதாககூறினார். அத்துடன் அர்ராஸி மற்றும் ஹுனைன் பின் இஸ்ஹாக் ஆகியோர் இரத்தத்தில் புளியத்திரவகம் இருப்பதாகவும் அதனால் பசியுணர்வை ஏற்படுத்துவதாகவும் விளக்கினார்கள். கி.பி 1288 இல் மரணித்த அலாவுதீன் இப்னுல் நாபிஸ் எனபவர் இரத்த சுற்றோட்டம் பற்றிய கருத்தை முன்வைத்தார். இக்கருத்தை ஆய்வாளர் ஜோர்ஜ் சார்டன் உறுதிப்படுத்துகிறார்.
 மருத்துவர் இப்னு ஸீனா (Avicena) நுண்ணங்கிகள் பற்றிய ஆய்வை முன்வைத்ததுடன் சமிபாடு வாயில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்று கூறினார். இப்னு கதீம் என்பவர் கிருமிகளினால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை முன்வைத்தார். இப்னில் பைதர் தனது 'அல்முப்ரதார்' என்ற நூலில் 1400 மூலிகைகளின் மருத்துவ பயன்களை விபரித்துள்ளார். அபுல் பராஜ் அல் இஸ்பஹானி என்பவர் நரம்புகளினூடாக உணர்வலைகள் கடத்தப்படுகின்றன என்ற கருத்தை முன்வைத்தார்.
 அபுல் காசிம் என்பவர் சத்திர சிகிச்சை முறையையும் அதற்குத்தேவையான கருவிகளையும் அறிமுகம் செய்தார். அத்துடன் முள்ளந்தண்டின் முண்ணானில் ஏற்படும் பாதிப்பு பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் குறிப்பிடுகின்றார். இரத்தம் வெளியேறுவதை தடுப்பதற்கு குளிரச் செய்யும் முறையையும் அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம் மருத்துவ ஆய்வாளர்களாவர். கண்ணுக்கான சத்திர சிகிச்சை பற்றிய முறையை இப்னுர் ராஷி அறிமுகம் செய்தார். அத்துடன் 'கிதாப் அல் ஜுதாரி வல்ஹிஸ்பா' என்ற நூலின் மூலம் பெரியம்மை சின்னம்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிமுகம் செய்தார். 1679 இல் பெரியம்மைக்கு பால் குத்தும் முறையை துருக்கிய முஸ்லிம்கள் கையாண்டார்கள்.
 மற்றும் பல மருத்துவ நிலையங்களையும் அமைத்தார்கள்:
1. முதலுதவி நிலையங்கள்
2. நடமாடும் வைத்திய சாலைகள்
3. நகர்ப்புர வைத்திய சாலைகள்
4. இராணுவ வைத்திய சாலைகள்
5. மனநோயாளர் வைத்திய சாலைகள்
6. சிறைச்சாலை வைத்திய சாலைகள்
7. மகளிர் வைத்திய சாலைகள்
போன்றனவாகும்.
இன்று வரைக்கும் முஸ்லிம் மருத்துவ அறிஞ்சர்களது அறிவியல் நூல்கள் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகங்களாக இருக்கின்றன, அத்துடன் இப்னு ஸீனா என்பவரை மருத்துவத்தின் தந்தையாக கருதுகின்றனர்.
இது தவிரவும் இவர்களது மருத்துவ நூல்கள் பலநூறு காணப்படிகின்றன.


எம்.ஐ.எம். அமீன் அவர்களின் "முஸ்லிம்கள் வளர்த்த அறிவியல், அழகியல் கலைகள்" என்ற புத்தகத்தை தழுவி எழுதப்பட்டது.


Tuesday, April 10, 2012

இமாம் ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை


நபி(ஸல்) கூறினார்கள்; “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்)

ஒவ்வொரு  நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், மேலும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் எவராலும் ஒன்றும்  செய்ய முடியாத காலகட்டத்தில் அபூர்வமான, அசாதாரண தகுதிகளுடைய ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களை அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அளித்தான்.

காலம்,வரலாறு, சூழல் உருவாக்கிய மனிதர் அல்ல. எவருடைய முயற்சியாலும் உருவான மனிதரும் அல்ல. அல்லாஹ்வின் விஷேட ஏற்பாட்டின் பெயரில் உதித்த மனிதராகவே நாம் ஹஸனுல் பன்னாஹ்வை காணமுடிகிறது. என இமாம் நத்வி கூறுகிறார்கள்.

“அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்”  என்ற இயக்கத்தை தொடங்கி இன்று எகிப்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கிய, இவரது பெயரைக் கேட்டாலோ, அவர் தொடங்கிய இயக்கத்தின் பெயரைக் கேட்டாலோ முஸ்லிம் இலட்சியவாதி ஒருவரின் உள்ளம் புத்துணர்ச்சி பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பத்து வயதிலேயே ஹஸனுல் பன்னாஹ்விடம் ஒரு சிறந்த மனிதருக்கான அனைத்து தகுதிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த வயதிலேயே அவர் இரண்டு இயக்கங்களை உருவாக்கினார்.

ஜம்மியத்துல் அஹ்லாக்குல் அதபிய்யா – நல்லொழுக்கங்களை உருவாக்கும் இயக்கம்.
ஜம்மியத்துல் மன்னில் முஹர்ரமா – ஹராம்களை தடைசெய்யும் இயக்கம் ஆகியனவாகும்.
1928-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தை 6 பேரைக் கொண்டு துவக்கிய பொழுது கூட அதனை அவர் இயக்கம் என பன்னாஹ் குறிப்பிடவில்லை. “முஸ்லிம் உம்மத்தின் உடலில் பாய்ச்சப்படுகின்ற ஆத்மா” என்று குறிப்பிட்டார்.

இஸ்லாத்திற்காக பணிபுரியும் சகோதரர்கள் நாம் என்பதால் ‘அல் இஃவானுல் முஸ்லிமூன்’ என பெயரிடுவதாக பன்னாஹ் கூறினார்.

இப்படி தன் வாழ்க்கையை முஸ்லிம் சமூகத்திற்காகவும், இஸ்லாத்திற்காகவும் அர்ப்பணித்த  இமாம் ஹசன்-அல்-பன்னா ஒரு முறை மாணவன் ஒருவருக்கு அளித்த அறிவுரை இன்று நம்மில் பலருக்கு நம்மை சரியான வழியில் பயணிக்கவும், நமது ஈமானின் கயிற்றை பற்றி பிடிப்பதற்கு உதவும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில், மாணவர்கள் சிலர் தனது படிப்பை மேலை நாட்டில் தொடரப் போவதாக அறிவித்தால், அவரது தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் என்று பலரும் அறிவுறுத்துவது அவரது இம்மை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக மட்டும் இருக்கும், ஆனால் மாமனிதர் இமாம் ஹஸன்-அல்- பன்னாஹ் 1935-ஆம் ஆண்டு காலப் பகுதியில் மேற்கத்திய தேசம் ஒன்றில் கல்வி கற்க தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு அளித்த நெஞ்சை உருக்கும் உபதேசங்கள் முற்றிலும் மறுமை வாழ்வை நோக்கமாக கொண்டே அமைந்திருந்தன.

அவர் அந்த கடிதத்தின் மூலம் தனது உபதேசங்களை பின்வருமாறு தெரிவித்தார்:-
கண்ணியத்துற்குரிய மாணவனே!

இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்கு பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குறிய உதாரணத்தை பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்கு பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.


நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்ப்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன்.
மேலும் உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். எனவே அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விஷயத்தில் பொடுபோக்காக இருந்துவிட வேண்டாம்.

உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ அல்லது காரணங்களை முன் வைத்து அதிக வேலைகளினாலோ பிற்படுத்தாதீர்கள். விட்டு விடாதீர்கள், ஏனெனில் அது இச்சையின் உணர்வுகள் என்று அல்லாஹ் தன் திருமறையில் பின்வாருமாறு கூறுகிறான்.

‘மனோ இச்சையை பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும்.’ (அல் குர்-ஆன் – 38:26)

அல்லாஹ்வை நெருங்கி செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்க்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையை செய்வது பன்மடங்கு கூலியை பெற்றுத் தரும்.

உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான காரியங்களை நிறைவேற்றுவதில் செலவு செய்யுங்கள். பர்லான தொழுகைகளையும், சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்யுங்கள்.

ஒருவன் பிரயாணத்தில் கேட்கப்படும் துஆ பதிலளிக்கப் படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுபடுத்திக் கொள்வதை நீட்டிக் கொள்ளுங்கள், ஏனென்றால்,

நபி(ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும் என அலி(ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்து இருந்தார்கள்.

அல்-குர் ஆனை விளங்கி, ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அது தான் உள்ளங்களுக்கான நோய் நிவராணமாகும். ஒவ்வொரு நாளையும் அல்-குர் ஆனை கொண்டே முடியுங்கள், ஏனெனில் அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.
மேலை நாட்டிற்கு பயணம் செய்யும் நீங்கள், அங்கே  பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து உள்ளத்தை திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும், மாயைகளையும் காண்பீர்கள். இவைகளெல்லாம் உங்கள் மறுமையை மறக்கடிக்காமல் இருக்கட்டும்.

இதனை அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றான்.
(நபியே!) அவர்களில் இருந்து சில பிரிவினருக்கு, உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு நாம் சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாக செலுத்த வேண்டாம். (ஏனெனில், மறுமையில் வழங்கப் பெறும்) உமது ரப்புடைய உணவு (இவ்வுலக வாழ்வில் அவர்கள் வழங்கப் பெறுவதை) விட மிகச் சிறந்ததும், நிலையானதும். (அல் குர்-ஆன் – 20:131)

எனது மதிப்பிற்குரிய மாணவனே!  மேலை நாட்டில் உள்ளவர்கள் அல்லாஹ் நமக்கு ஹராமாக்கியதை ஹலாலாக கருதுவார்கள். அந்த ஹராமான விஷயங்களை செய்ய சற்றும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே நீங்கள் அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ள வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியில் இருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதரமாக இருக்க மாட்டது.

மேலும் நீங்கள் அங்கு, இளமை நிறைந்த பெண்களுடன் தோழமை கொள்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது ஏனையவர்களுக்கு ஒரு குற்றமாக காணப்பட்டால் உங்கள் மீது இரண்டு குற்றங்களாகும்.  மதுபானத்தை நெருங்காதீர்கள், அவ்வாறு நெருங்குவதற்கு சூழலை காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராமான உணவினால் வளரும் உடம்பு நரகத்திற்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியை தவிர வேற ஒன்றுமில்லை.
இன்னும் தூய்மானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார். (அல் குர்-ஆன்  – 7:157)

இவ்வாறு  இன்னும் பல விஷயங்கள் இருப்பினும், அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் எனப் பயப்படுகிறேன் என்று தனது நெஞ்சுருகும் அறிவுரையை யார் என்று அறியாத, சொந்தமோ பந்தமோ இல்லாத ஒரு மாணவனுக்கு அவர் வழங்கிய அறிவுரை நமது வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது..

இப்படிப்பட்ட மாமனிதர் இந்த உலகத்தைவிட்டு மறைந்து 63 வருடங்கள் கழிந்துவிட்டன என்பதை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் சொரிகின்றன. உள்ளங்கள் ஏங்குகின்றன.
ஆம்! அவர் தன்னுடைய 42 வருட வாழ்வை இஸ்லாதிற்க்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் செலவழித்து, மாபெரும் இயக்கமான “அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்”  என்ற இயக்கத்தை துவங்கி, மகத்தான எழுச்சியை கண்ட பன்னாஹ் அவர்கள் பிப்ரவரி 12, 1949 ஆண்டு  இதே நாளில் மன்னர் ஃபாரூக்கின் சூழ்ச்சியால் எதிரிகளால் சுட்டு  வீழ்த்தப்பட்டு ஷஹீத் என்ற அந்தஸ்தை அடைந்து இறைவனிடத்தில் சேர்ந்தார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்).

20-ஆம் நூற்றாண்டில் அற்புதமான மனிதர்களை இந்த உலகம் காண வித்திட்ட ஹஸனுல் பன்னாஹ்வின் வாழ்க்கையை நமது இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். முழுமையான இஸ்லாமிய ஆளுமையை தோற்றுவிக்கும் விதமாக ஹஸனுல் பன்னாஹ்வின் தர்பியா(ஒழுக்க பயிற்சி) அமைந்திருந்தது. ஆன்மீகம், அறிவு, பண்பாட்டு, சமூக விவகாரங்கள், அரசியல், இறை வழி போராட்டம், உடல் பலம் என அனைத்து துறைகளையும் தழுவியதுதான் பன்னாஹ்வின் பயிற்சியாகும்.

இஸ்லாமிய இலட்சியவாதிகளை குறித்து படிக்க முயலும் வேளையில் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களின் ஆளுமை, அணுகுமுறைகள் மறக்காமல் படிக்கப்பட வேண்டும்.
* யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் *

Wednesday, April 4, 2012

அல்குர்ஆனிய துஆக்கள்



إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّين

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." 2:127-128

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" 2:201

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!". 2:250

سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்". 2:285

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" 2:286

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" 3:8

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!" 3:16.

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்." 3:26

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
"இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." 3:38

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" 3:53

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". 3:147

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!". "எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!". "எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". "எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" 5:83

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்". 7:23

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்". 7:89

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" 7:126

لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்". 7:149

وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ
"இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" 7:156

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" 9:129

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
"நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" 10:85

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
"(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!" 10:86

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ
இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 11:41

رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ
"என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்". 11:47

فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

"வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!" 12:101

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" 14:40

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக". 14:41

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
"என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" 17:24

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250

سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُஎங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:53

 رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. 3:147

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!” 5:83

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126

لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149

وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ
இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ
இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 11:41

رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ
என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47

فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” 14:40

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41

 رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” 17:24

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”. 18:10

رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا
என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! 19:4-5

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي
இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!” 20:25-28

رَّبِّ زِدْنِي عِلْمًا
இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” 20:114

أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” 21:83

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. 21:87

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” 21:89

رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ
என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!”. 23:26

الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. 23:28

رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ
இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்”. 23:29

رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ
என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” 23:39

رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ
என் இறைவனே! என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”. 23:94

رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”. 23:109

رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” 23:118

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”. 25:65

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம். 26:51

الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ
அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். 26:78

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87

فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ الْمُؤْمِنِينَ
நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!”. 26:118

رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ
என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!”. 26:169

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. 27:19

 رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”. 28:16

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”. 28:21

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”. 28:24

رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” . 29:30

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”. 37:100

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5

َ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8

رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!”. 66:11

عَسَىٰ رَبُّنَا أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَا إِنَّا إِلَىٰ رَبِّنَا رَاغِبُونَ
எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்”. 68:32

رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. 71:128

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). 113:1-5

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். 114:1-6