சமூக மாற்றத்தை நோக்கி...

அடுலுகம

அடுலுகம பிறை குத்பாவுக்கான விமர்சனம்

ஜும்ஆ குத்பா அட்டுலுகம தமிழ் பயான்ஸ்.கொம் இனையத்தளம்.
பிறை தொடர்பாக குத்பா நிகழ்த்திய பாஹிம் முப்தி அவர்களது வாதங்களும் அந்த வாதங்கள் பொருத்தமானதாக இல்லை என்பதற்கான சில மாற்றுக் கருத்துக்களும்.

1. இன்றைய காலத்தைவிடவும் தரமான, கூடுதலான வானவியலாளர்கள் அக்(நபிகளார்)காலத்தில் இருந்தனர்.

இதனைப் பொருத்தவரை முப்தி அவர்கள் இது குறித்து கொஞ்சம் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும். ஏனெனில் அப்பாஸியரது காலத்திலே வானவியல் குறிப்பிடத்தக்க அளவில் வளர ஆரம்பித்திருந்தது. அதுவரை அரேபிய தீபகற்பத்தில் குறிப்பிடத்தக்க எந்த வானியல் அறிஞர்களும் இருக்கவில்லை என்பது தெளிவான வரலாறு. அது அப்படி இருக்க இன்றைய காலத்தில் உள்ள வானியல் அறிஞர்களைவிடவும் திறமையானவர்களாக, இன்றைய காலத்தைவிடவும் தரமான கருவிகள் இருந்தன என்பதை யார்தான் எற்பார்கள்? எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் தெரிந்தவர்களே ஒரு சிலரே இருக்க வானியல் ஆய்வு வாடைகூட இருந்திருக்கவிலை. இதற்கு சிறியதொரு உதாரணத்தை தருகிறேன். அஸ்மா பின்த் அபீபக்கர் (ரலி) அறிவித்தார் "நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்தபின்னர் சூரியன் தென்பட்டது. (புஹாரி:1959) இந்த ஹதீஸைப் பார்த்ததுமே புரிந்துவிடும் அன்றைய காலத்து வானில். இது இப்படியிருக்க முப்தி அவர்கள் எந்த சிந்தனையில் இப்படி மிம்பரில் சொன்னார் என்ர் தெரிய வில்லை. இதனை வாசகர்களது சிந்தனைக்கு விடுகிறேன்.

2. தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணுக்கு 3 பிரியட் இருக்காமல், தொழினுட்பத்தைப் பயன்புத்துவோம் என்பவர்கள் ஸ்கேன் மூலம் பார்த்துவிட்டு இத்தா இருக்கத் தேவை இல்லை என்று சொல்வார்களா?

இது முப்தி அவர்களது சிறு பிள்ளைத்தனமான வாதமாகும் ஏனெனில் இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது "தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று குரூஃகள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்.....(2:228)" என்கிறது. இங்கு மாற்றுக் கருத்தில்லை, இது ஓரே ஒரு குர் ஆன் வசனம். அந்த வசனம் மிகத் தெளிவானது 3 பீரியட்கள் இருந்தாகனும். ஆனால் இங்கு வரும் ஹதீஸ்கள் பலவுள்ளன. அனைத்தையும் ஆராய்ந்த பிறகே முடிவுக்கு வரவேண்டும்.

முப்தி அவர்களே! நீங்களே குறிப்பிட்டது போன்று "பிறையை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்; பிறையை பார்த்து நோன்பை நிறைவு செய்து கொள்ளுங்கள்"  “பிறையை பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையை பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள்" இந்த இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் எடுப்பதாயினும் இங்கு பிறையை பார்க்கச் சொல்லி இருப்பதே தவிர வெற்றுக் கண்ணால் தான் பார்க்க வேண்டும். என்று சொல்லப்படவில்லையே! அத்துடன் உமது பகுதியிலேதான் பார்த்தாக வேண்டும் என்றும் சொல்லப்படவில்லையே! நீங்கள் பிரதானமாக குறிப்பிடும் ஹதீஸில் இருந்தே தெரிகிறது, எந்தப் பகுதியில் பார்த்தாலும் அது அனைவராலும் ஏற்கப்பட வேண்டும், எந்தக் கருவியைக் கொண்டு பார்த்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை, அது ஏற்கத்தக்கதே என்பது. (கருவியால் பார்பதற்கும், வேறு பகுதிகளில் பார்ப்பதை ஏற்பதற்கும் தடைகள் இல்லை

4. இன்று சொந்த வாகனம் இருப்பதால், நவீன சாதனங்களினால் எவ்வளவு தூரத்தையும் குறுகிய நேரத்தில் கடக்க முடியுமாதலால் தொழினுட்பத்தைப் பயன்படுத்துவோம் என்பவர்கள் தொழுகைகளை சுருக்கி, சேர்த்து தொழத் தேவையில்லை என்பார்களா?

இதனைப் பொருத்தவரைய முப்தி அவர்களினது விடயம் சம்பந்தமான குறுகிய பார்வையே காட்டுகின்றது. ஜம்உ, கஸ்ர் என்கிற தொழுகைக் குரிய சட்டங்களில் தூரம் காரனமாக இருக்கின்றதே தவிர நேரம் இங்கு கருதப்படவில்லை. இது பற்றிய ஹதீஸில் "கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப் பட்ட போது, ''நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்'' என்று பதிலளித்தனர். அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத், (முஸ்லிம் 1230) எனவே முப்தி அவர்களே நீங்கள் உங்கள் கருத்துக்கு சார்பாக வலிந்து அல்லது அறியாமையினால் சமூகத்தை பிழையாக வழிநாடாத்துகின்றீர்கள். இங்கு அனஸ் (ரழி) அவர்கள் நேரத்தைக் குறிப்பிடவில்லை மிக மிகத் தெளிவாக தூரத்தையே குறிப்பிட்டுள்ளார் என்பதை யாரும் அறிந்துகொள்ளமுடியும்.

5. தொழுகைக்கு நேரம் பார்க்கத் தேவையில்லை, ஏனெனில் அவ்வாறு இஸ்லாம் சொல்லவில்லை.


இதுவும் பிழையான கூற்றாகும். ஏனெனில் நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிப்பிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.(4:103).நேரம் என்றே மிக தெட்டத் தெளிவாகக் குறிப்பிடுகின்றான். அது மட்டுமன்றி தொழுகை நேரங்கள் பற்றி வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் குறிப்பிட்ட நேரங்களை வரையருத்துக் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்

இன்னும் மஃரிபுடைய நேரம் செவ்வானம் மறையாத வரையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீன்ட ஹதீஸ் ஒரு பகுதி). அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : முஸ்லிம் (612

இன்னும் ஸுப்ஹ் (தொழுகை) உடைய நேரம் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் உதயமாகும் வரையிலாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : முஸ்லிம்.

லுஹர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் (உச்சி) சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனுக்கு சமமாக ஆகி அஸருடைய நேரம் வராத வரையிலாகும். இன்னும் அஸர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் மஞ்சல் நிறத்தையடையாத வரையாகும். இன்னும் மஃரிப் (தொழுகை) உடைய நேரம் செவ்வானம் மறையாத வரையாகும். மேலும் இ ஷா (தொழுகை) உடைய நேரம் நள்ளிரவு வரையாகும். இன்னும் ஸுப்ஹ் (தொழுகை) உடைய நேரம் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் உதயமாகும் வரையிலாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : முஸ்லிம் (612)

இப்படி ஏறாலமான ஹதீஸ்கள் கணப்படுகின்றன.
இவை நேரத்தைக் குறிப்பிடவில்லையா?

6. “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்”(அல் பகரா:185) இவ்வசனத்தை முஃப்தி அவர்கள் தமது கருத்துக்கு சார்பாக விளக்கம் சொல்ல முற்படுகின்றார்.

சிலர் அம்மாதத்தை அடைய மாட்டார்கள் என்றோ அல்லது ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாகவோ கருதமுடியாது, அவ்வாறு பொருள்கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனம் தெளிவானதாகும். இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது றமழான் வந்துவிட்டால் அனைவரும் நோன்பு நோற்கவேண்டும் என்பதே.

7. அவர்கள் பிறைகளைப் பற்றிக் கேற்கிறார்கள்.... (குர்ஆன்) என்கிற குர்ஆனுடைய வசனத்துக்கு விளக்கம் கூறும் போது பல பிறைகள் தோன்றலாம் என்றும் இலங்கையில் ஒன்று, சவுதியில் ஒன்று, லண்டனில் ஒன்று எனவே வெவ்வேறு நாட்களில் நோன்பையும், பெருநாளையும் எடுக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இது புதுமையான விளக்கம் எந்தத் தப்ஸீரில் இருந்து எடுக்கப் பட்டதோ தெரியாது. எனினும் இக்குர் ஆன் வசனம் தொடர்ந்து சொல்லும் போது
"........அவை மக்களுக்கு காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன்....."

என்று தொடர்கின்றது. இங்கு அல்லாஹ் நோன்பை சம்பந்தப் படுத்தவே இல்லை. பொதுவாக காலம் காட்டுபவை என்றுதான் குறிப்பிடுகின்றான். இது எல்லா சந்தர்ப்பத்துக்கும், எல்லா சமூகத்துக்கும் (முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் என்ற பாகுபாடின்றி)பொதுவாகச் சொல்லப்பட்டவிடயமாகும். இந்த குர் ஆன் வசனம் குறிப்பாக ஹஜ்ஜையே இங்கு குறிப்பிடுகின்றதே தவிர நோன்பையல்ல என்பது சதாரனமாக பார்க்கும் யாருக்கும் புரியக்கூடியதாகும்.

(இங்கு இன்னொருவிடயத்தையும் அல்லாஹ் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறான், அதுதான் பிறைகளை அடிப்படையாக வைத்து உங்களுக்கு காலத்தை அறிந்து கொள்வதற்கான ஒரு நாட்காட்டியை அமைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அது. இது இன்னொருவகையில்யஹூதி நஸாராக்களை பின்பற்றாமல் இருப்பதற்கும் உருதுனையாகும்)

8. சூரியனும் சந்திரனும் குறிப்பிட்ட ஒரு கணக்கின்படி இயங்குகின்றன. (55:5)

இந்த வசனத்துக்கு முஃப்தி அவர்கள் "இந்த குராஆன் வசனம் 29 நாட்கள் 12 மணித்தியாளங்கள் 44 நிமிடங்கள் 2.78 வினாடிகள் என்பதையே இங்கு
குறிப்பிடிகின்றது." என்று சந்திர மாதக் கணக்கை கணித்துச் சொல்லிவிட்டு. இக் குர்ஆன் வசனம் கணிப்பிட முடியும் என்பதைக் குறிக்க வில்லை என்கிறார்

இது ஒன்றுக்கு ஒன்று முறன்பாடு என்பது ஏன் புரியவில்லையோ. பரவாயில்லை அல்லாஹ்வே சொல்கிறான் சந்திரன் கணக்கின் படிதான் இயங்குகிறது என்று. எனவே இங்கு கணக்கிட முடியாது என்பதற்கு முன்வைக்கப்படும் வாதம் நகைப்புக்கிடமானதாகும்.

9. ஒவ்வொரு நாளும் பிறை பார்க்கத் தேவையில்லை.

இந்த வாதத்தினைப் பொருத்தவரை தான் சரி எனக்கண்ட கருத்துக்கு எப்படியாவது சான்று சேர்த்து எதிர்தரப்பை பிழைகாண முட்பட்டதாகும். இக்கருத்து மிகத்தெளிவான பிழையாகும். ஏனெனில் ஆதாரம் தேவையில்லாத அளவுக்கு அனைவருக்கும் தெரிந்ததுதான். மாதத்தின் இடையிலும் பிறை நாட்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக,

அ) ஆசூரா நோன்புக்கு
ஆ) அரபா நோன்புக்கு
இ) ஐயாமுத் தஷ்ரீக் (இது ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்து வரும் 3 நாட்கள் நோன்பு நோற்கக் கூடாத நாட்களுள் ஒரு தொடர்)
ஈ) ஐயாமுல் பீல் (மாதம் தோரும் வரும் பிறை 13, 14, 15 ஆகியதினங்களில் வருபவை)
மேலுள்ளவற்றைக் குறிப்பிடலாம்.

10. எந்த அறிஞரும் இப்படி கணக்குப் பார்க்கச் சொல்லவில்லை.

அறிஞர்கள் யாரும் அவ்வாறு கூறத்தேவையில்லை,
ஏனெனில் அல்லாஹ்வும், நபிகளார் صلى الله عليه وسلم அவர்களும் கணக்கிடச் சொன்னார்கள்,


இந்தவாதத்தைப் பற்றி, அல்குராஅன் கூறும் போது,
"(இரவு, பகல்) நேரத்தை நீங்கள் துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள்" (73:20)

சூரியனும் சந்திரனும் குறிப்பிட்ட ஒரு கணக்கின்படி இயங்குகின்றன. (55:5)

காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் (6:96)

(சூரியனும், சந்திரனும்) ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலங்களின் எண்ணிக்கையையும் அறியும் பொருட்டு...(10:05)

இவை கணிப்பிட முடியும் என்பதனை தெளிவாக சொல்கின்றன

அ) “ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்”. (அபூஹூரைரா (رضي), திர்மிதி)

ஆ) "நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது; கணக்கிடவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது 29ஆகவோ 30 ஆகவோ இருக்கும்" (இப்னு உமர் (رضي), புகாரி) (இன்னும் பல)

அறிஞர்கள் சொல்லவில்லை என்பதும் ஆதாரம் இல்லாத கருத்தாகும். ஏனெனில்,

இமாம் தகீ-அல்-தீன் அல்-சுப்கி

இமாம் அபூ அல்-அப்பாஸ் இப்னு சுரைஜ்

ஷேக் அஹ்மத் முஹம்மத் ஷாகிர்

டாக்டர் ஜமால் பதாவி

டாக்டர் இஹ்ஸான் பாக்பி

டாக்டர் யூஸுஃப் கர்தாவி

டாக்டர் ஜுல்ஃபிகார் அலி ஷா

(போன்ற இன்னும் பல இஸ்லாமிய அறிஞர்கள்)

இந்திய பிறைக்கு
வட அமெரிக்க ஃபிக்ஹ் குழு..........


குறிப்பு: இவ்வாறு நவீன, பழைய காலங்களிலும் இன்னும் பல அறிஞர்களும் கணப்படுகின்றனர், இன்னும் சில பழைய அறிஞர்கள் கணக்கீட்டை அனுமதிப்பதிக்கவில்லை என்பது உண்மை, அதற்கு பிறதான காரணம் அக்காலத்தில் இன்றுள்ளவாறு துல்லியமாகக் கணக்கிடும் வழிவகை இல்லாதிருந்ததே எனலாம்

ஆதாரம்: Shah, Zulfikar Ali, "Astronomical Calculations: A Fiqhi Discussion," Presented before the Fiqh Council of North America and accepted by it on June 10, 2006.

இங்கு விணோதம் என்னவெனில் இன்று நாம் அதிகமான விடயங்களை நாம் கணக்கிட்டு மனப்பூர்வமாக ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான். உதாரணமாக

அ) சுபஹ், லுஹர், அஸ்ர், மஃரிப், இஷா

ஆ) சூரிய உதயம்

இ) இஷ்ரா

ஈ) சஹர் முடிவு

உ) இத்தா காலம்

மிகவும் தெளிவான ஹதீஸ் என்று சொல்லி சொன்னது, "நீங்கள் அனைவரும் சேர்ந்து நோன்பு நோற்கக் கூடிய நாள் அதுதான் உங்களுடைய நோன்பு நோற்கும் நாள்........"

மிகத்தெளிவான ஹதீஸ் என்று சொல்லப்பட்டது. இந்த ஹதீஸ் எதனை சொல்கிறது. அது தெளிவாக சொல்கிறது குறிப்பிட்ட குழு அல்ல, அல்லது குறிப்பிட்ட ஜமாஆத் அல்ல, அல்லது குறிப்பிட்ட நாடு அல்ல "நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து..." என்று இது முலு உலகையுமே குறிக்கிறது என்ற விடயத்தினை முஃப்தி அவர்கள் கண்டிகொள்ளவில்லையோ? இந்த ஹதீஸ் மறைமுகமாக ஒருவிடயத்தை சொல்கிறது அதுதான் "நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் பொருநாளோ, நோன்போ வரப்போகிறது" அப்படியெனில் நாம் அனைவரும் ஒன்று சேராத இந்நாள் வரை நோன்பையோ, பெருநாளையோ... அனுபவிக்கவில்லையோ???????

யா அல்லாஹ் எமது அறியாமையையும், அப்பாவித்தனத்தையு, அடம்பிடித்தலையும் மண்ணித்து எம்மை ஏற்றுக் கொள்வாயாக

No comments:

Post a Comment