(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (குர்ஆன் 18: 109)
இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) (புஹாரி 3806)
மனித குலத்துக்கு வழிகாட்ட வந்த தனிப்பெரும் நூலான அல் குர் ஆன் கூரிமுடிக்க முடியாத ஒரு அறிவியல் ஊற்றாகும் இதற்கு காலத்துக்குக் காலம் வாழ்ந்த அறிஞ்சர்கள் விளக்கங்களை வழங்கி சென்றுள்ளனர். இவர்களில் திருக்குர்ஆனின் முதற்பெரும் விரிவுரையாளர் அண்ணல் நபி (ஸல்) அவர்களேயாவார். அவர்களுக்குப் பின் ஸஹாபாக்களில் குர்ஆனுக்குத் தப்ஸீர்-விரிவுரை செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் :
1. நாயகத் தோழர்கள்
01. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி)
02. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
03. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
04. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
05. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி
06. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
07.உபை இப்னு கஃபு (ரலி)
08.ஸைத் இப்னு தாபித் (ரலி)
09.அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)
10.அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி)
2. தாபியீன்கள்
தாபியீன்களில் புகழ்வாய்ந்த முஃபஸ்ஸிரீன்கள்:-
1. இமாம் முஜாஹித் (ரஹ்) ( இவர்களே தாபியீன்களில் புகழ் வாய்ந்த முஃபஸ்ஸிராவார்கள்.)
2. இமாம் ஸயீது இப்னு ஸுபைர் (ரஹ்)
3. இமாம் இக்ரிமா (ரஹ்)
4. இமாம் அதா இப்னு ரபாஹா(ரஹ்)
5. இமாம் ஹஸன் பஸரீ(ரஹ்)
6. இமாம் மஸ்ரூக் (ரஹ்)
7. இமாம் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்)
8. இமாம் அபுல் ஆலியா(ரஹ்)
9. இமாம் ரபீஹ் இப்னு அனஸ்(ரஹ்)
10. இமாம் கதாதா (ரஹ்)
11.இமாம் ளஹ்ஹாக்(ரஹ்)
இவர்கள் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களும், அவர்களின் மாணவர்களுமாவார்கள்.
4. நவீனகால தஃப்ஸீர்கள்:
இவர்கள் தபஉத்தாபியீன்களை அடுத்த தொடரில் வந்தவர்களின் தொகுப்புக்களாகும். இதுவரை வெளிவந்துள்ள இரண்டு இலட்சம் தப்ஸீர்களில், மொழி பெயர்ப்பகளில் 20,000 விளக்க வுரைகளுக்குக் குறையாமல் திரிப்போலியிலுள்ள நூல்நிலையத்தில் இருப்பதாக டாக்டர் அர்னால்ட் கூறுகிறார். ஆங்கிலம் இலத்தீன், ஜெர்மனி டச்சு ,பிரஞ்சு,ரஷ்யா ஆகிய மொழிகளிலெல்லாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இத்துடன் மதீனாவிலுள்ள மன்னர் ஃபஹ்து குர்ஆன் வெளியீட்டகம் மட்டும் இதுவரை 150 மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து பலகோடி பிரதிகளை ஆண்டு தோறும் ஹஜ்ஜுக்கு வரும் ஹாஜிகளுக்கும், உலகிலுள்ள பல பாகங்களுக்கும் இலவசமாக வினியோகம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.
இது தவிரவும் 36 ஐரோப்பிய மொழிகளில் 374 திருக்குர்ஆன் மொழபெயர்ப்புகள் 60 ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டன. இப்போது இவற்றின் பெருக்கம் மிக அதிகமாகும்.
2. ஜெர்மனியில் 46 மொழி பெயர்ப்புகள்
3. இலத்தீனில் 43 மொழி பெயர்ப்புகள்
4. பிரஞ்சில் 36 மொழி பெயர்ப்புகள்
5. துருக்கியில் 33 மொழி பெயர்ப்புகள்
6. ஸ்பானிஷ் 19 மொழி பெயர்ப்புகள்
இத்தகவலை ஆய்வாளர் டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள் 1970ல் வெளியிட்டுள்ளார்கள்.
.jpg)
No comments:
Post a Comment