02.தப்ஸீருல் குர்ஆனுல் அளீம்
(இமாம் இப்னு கதீர்-இமாதுத்தீன் அபுல் ஃபிதா(ரஹ்)
03.அல் ஜாமிவு லி அஹ்காமில் குர்ஆன்
(இமாம் குர்துபீ (ரஹ்)
04.தப்ஸீருல் கஷ்ஷாஃப்
இமாம் அபுல் காஸிம் மஹ்மூது இப்னு உமர் ஸமக்ஸரி ஜாருல்லாஹ்(ரஹ்) இவர் மக்கா ஹரமுக் கருகே குடியிருந்ததால் ஜாருல்லாஹ் (அல்லாஹ் வின்அண்டைவீட்டுக்காரர் என அழைக்கப்பட்டார்.
05.தப்ஸீர் ரூஹுல் மஆனி
இமாம் ஷிஹாபுத்தீன் அலூஸி (ரஹ்)
06.தப்ஸீர் அல்பஹ்ருல் முஹீத்
இமாம் அபூ ஹய்யான (ரஹ்)
07.தப்ஸீர் பஹ்ருல் உலூம் ஸமர்கந்தீ
இமாம் அபுல்லைத் நஸ்ர் இப்னு முஹம்மது அஸ்ஸமர்கந்தீ (ரஹ்)
08.மஆலிமுத் தன்ஸீல்-தப்ஸீர் பகவீ
இமாம் அபூ முஹம்மது அல்- ஹுஸைன் இப்னு மஸ்வூது அல்பகவீ(ரஹ்)
09.அத்துர்ருல் மன்தூர்
இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூத்தி(ரஹ்)
10.தப்ஸீர் ஜலாலைன் (இதற்கு இரு ஆசிரியர்கள்) இது தமிழகத்தின் அரபுக் கல்லூரி களில் பாடநூலாக இருந்து வருகிறது
1.இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி (ரஹ்) ஹி-864,
2.இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ (ரஹ்)ஹி-911. (அதாவது ஆசிரியர் ஸுயூத்தி (ரஹ்) பாதி எழுதியது் மரணம டைந்தார். மறுபாதியை அவரது மாணவர் மஹல்லீ எழுதி முடித்தார்.
11.அன்வாருத்தன்ஸீல் வ அஸ்ராருத் தஃவீல் (தப்ஸீர் பைளாவி) இது அரபுக்கல்லூரிகளில் இறுதியாண்டு பாடநூல்)
இமாம் நாஸிருத்தீன் அபுல் கைர் அப்துல்லாஹ் அல்- பைளாவீ (ரஹ்).
12.அத்தப்ஸீருல் கபீர் -மஃபாதீஹுல்கைப்.
இமாம் பக்ருத்தீன் முஹம்மது இப்னு உமர் அத்தைமீ ராஸி(ரஹ்) ஹி-606
13.தப்ஸீர் அபுஸ்ஸுஊது
இமாம் அபுஸ்ஸுஊது இப்னு முஹம்மது அல் இமாதீ(ரஹ்)
14.தப்ஸீர் இப்னு மாஜா
இமாம் இப்னு மாஜா அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யஸீத்.(ரஹ்)
15.தப்ஸீர் நைஸாபூரீ
இமாம் நைஸாபூரீ(ரஹ்)
16.தப்ஸீர் நஸஃபீ
இமாம் நஸஃபீ(ரஹ்)
17.தப்ஸீர் அல் கதீப்
இமாம் அல் கதீப்(ரஹ்)
18.அல்-கஷ்ஃபு வல்பயான் (தப்ஸீர் தஃலபீ)
இமாம் அபூ இஸ்ஹாக் அஹ்மது இப்னு இப்றாஹீம் அத்தஃலபீ
19.அல் முஹர்ரருல் வஜீஸ்
இமாம் அபீ முஹம்மது அப்துல்ஹக் இப்னு காலிப் இப்னு அதிய்யா (ரஹ்)
20.அல்-ஜவாஹிருல் ஹஸ்ஸான்
இமாம் அபூ ஸைது அப்தூரஹ்மான் அத்தஆலபீ அல்ஜஸாயிரீ
21.தப்ஸீருல் காஸின்
இமாம் காஸின்(ரஹ்)
22.ஃபத்ஹுல் கதீர் -தப்ஸீருஷ்-ஷவ்கானீ. (தப்ஸீர் ஷவ்கானி)
இமாம் அஷ்-ஷவ்கானி(ரஹ்).
23.அல்புர்ஹானு ஃபீ உலூமில் குர்ஆன்
இமாம் அஸ்-ஸர்கஸீ(ரஹ்)
24.தைஸீருல் கரீமுர்ரஹ்மான்
அஷ்-ஷைகு அப்துர் ரஹமான் அஸ்-ஸஃதீ(ரஹ்)
25.ஸாதுல் மஸீர் ஃபீ இல்மித்ப்ஸீர்
இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்)
26.மஹாஸினுத் தஃவீல்
இமாம் அல்-காஸிமீ(ரஹ்)
27.அத்தஃஸீருல் முனீர் லி மஆலி முத் தன்ஸீல்
இமாம் முஹம்மது இப்னு உமருல் ஜாவீ நவவீ கி.பி 1898
28.அஹ்காமுல் குர்ஆன்
இமாம் ஷாபியீ (ரஹ்)
29.தஃப்ஸீருல் மனார்
அஷ்-ஷைகு முஹம்மது ரஷீது ரிளா(ரஹ்)
30.தஃப்ஸீர் ஸூரத்துந்நூர்
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)
31.அத்தஹ்ரீர் வத்-தன்ஸீல்
அல்லாமா அத்தூனிஸித்தாஹிர் இப்னு ஆஷூர்(ரஹ்).
32.அய்ஸருத் தபாஸீர்
அஷ்-ஷைகு அபூபக்ர் அல் ஜஸாயிரீ(ரஹ்).
33. ஸஃப்வத்துத் தஃபாஸீர்
அஷ்-ஷைகு அஸ்-ஸாபூனி(ரஹ்)
34.நைலுல் மராம் மின் தஃப்ஸீர் ஆயாதில் அஹ்காம்
ஷைகு முஹம்மது ஸித்தீக் ஹஸன் கான் (ரஹ்)
35.தப்ஸீர் ஷஃராவி
ஷைகு அஷ்-ஷஃராவி(ரஹ்)
36.அந்நபவுல் அளீம்
அறிஞர் முஹம்மது அப்துல்லாஹ் தராஸ்(ரஹ்)
37.அல்ஜவாஹிர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம்
ஷைகு தந்தாவி ஜவ்ஹரீ (ரஹ்) (1870-1940)(இது விஞ்ஞான விளக்கங்க ளோடு எழுதப்பட்ட முதல் விரிவுரை நூல்)
38.அத்தப்ஸீர் ஃபீ ளிலாலுல் குர்ஆன்
அஷ்-ஷைகு ஷஹீத் சையிது குதுப்
(நவீன உலகின் முன்னனி குர்ஆன் விளக்கவுரையாக இவரது பீழிலாழில் குர்ஆன் கருதப்படுகின்றது - இந்த விளக்கவுரையின் அரைவாசியை சிறையில் இருந்தே எழுதினார்.)39.பைளுல் கபீர்
அஷ்-ஷைகு ஷா வலியுல்லாஹ் அத்தெஹ்லவி(ரஹ்)
40.நள்ராத் ஃபீ கிதாபில்லாஹ்
அஸ்-ஸய்யிதா ஸைனபுல் கஸ்ஸாலி.(ரஹ்) (முதல் பெண் குர்ஆன் விரிவுரையாளர என்ற பெருமையைப் பெறுகிறார்)
41.தஃப்ஸீர் ஜீலி
ஷெய்கு அப்துல் கரீம் ஜீலி.இவர் பிஸமில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்பதி லுள்ள 19 எழுத்துகளுக்கும் 19 தொகுதிகளில் தஃப்ஸீர் எழுதியுள்ளார்.
42.தஃப்ஸீர் அப்துஸ்ஸலாம்.
அப்துஸ்ஸலாம்.இப்னு முஹம்மது.இவர் 500 தொகுதிகளில் தஃப்ஸீர் எழுதியுள்ளார்.சூரத்துல் பாத்திஹாவிலுள்ள 7 வசனங்களுக்கும்
43.தஃப்ஸீர் இமாம் புகாரி
இமாம் முஹம்மது இஸ்மா யீல் புகாரி(ரஹ்).1000 தொகுதி் களில் ஒரு தஃப்ஸீர எழுதியுள் ளார்கள். அது இப்போதுகிடைப் பதில்லை.
44.தஃப்ஸீர் இமாம் கஸ்ஸாலி
இமாம் கஸ்ஸாலிர(ரஹ்).80 தொகுதிகளில் ஒரு தஃபஸீர்.
45.தி குர்ஆன் ( The Qur’an),ஆங்கிலம்
அல்லாமா யூஸுப் அலி ( முதல் ஆங்கில மொழி பெயர்ப்பு)
46.தி குளோரியஸ் குர்ஆன் (The Glorious Qur’an) (ஆங்கிலம்)
முஹம்மத் மார்மடியூக் பிக்தால்.12 மொழிகளில் தேர்ந்த கிறித்தவரான இவர் இஸலாத்தைத் தழுவிய பின் ஆங்கிலத்தில் எழுதிய மொழியாக்கம்.
47.தி நோபிள் குர்ஆன் (The Noble Qur’an) (ஆங்கிலம்).
டாக்டர் முஹம்மத் தகிய்யுத்தீன் அல்-ஹிலாலி டாக்டர் முஹம்மத் முஹ்ஸின் கான். ( தாருஸ்ஸலாம்,ரியாள் (KSA) வெளியீடு)
48.தர்ஜுமானுல் குர்ஆன்(ஆங்கிலம்)
இந்திய முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆஸாத்.
49.தர்ஜுமத்துல் குர்ஆன்(தமிழில்)
ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி.சென்னை. - தமிழில் வந்த முதல் மொழியாக்கம்.
50.தஃப்ஸீர் ஹமீது (தமிழில்)
எஸ்.எஸ். அப்துல் காதிர் பாக்கவி.உத்தம பாளையம்.
51.அன்வாருல் குர்ஆன் (தமிழில்)
அப்துர்ரஹ்மான் நூரிய்யி, பாஸில் பாக்கவி. தென்காசி. - தமிழில் வெளிவந்த முதல் முழு தஃப்ஸீர்.
52.தஃப்ஹீமுல் குர்ஆன் (தமிழில்)
மவ்லானா அபுல் அஃலா மவ்தூதீ (ரஹ்) வசனத்தின் பின்னணிகள், அருளப்பட்ட காரணங்கள், கருத்துரைகள், படிப்பினைகள் இதில் சுருக்கமாக விளக்கப் படுகின்றன.
53.குர்ஆன் மஜீத் (தமிழில்)
ஜான் அறக்களை (மூலமும் தமிழும்) ஹாஜி முஹம்மது் ஜான் அவர்களால் வெளியிடப் பட்ட இந்நூல் 14 பதிப்புகள் வரை வந்துள்ளன.1,58,000 பிரதி கள் வரை விற்பனையாகியுள்ளன. தமிழில் அதிகமாக விற்பனையான முதல் தமிழாக்கம் இதுவே. இவரே 1960ல் நியூயார்க் நகரில் முதல் பள்ளிவாசல் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 400க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள் அங்கு எழுந்துள்ளன.
54.திருக்குர்ஆன் (தமிழில்)
பி.ஜைனுல் ஆபிதீன் குர்ஆன் அறிமுகம், வசனப் பின்னணிகள், அறிவியல், வரலாற்று விளக்கங்களுடன் எழுதப்பட்ட நூல்.
55.திருக்குர்ஆன் (தமிழில்)
திருக்குர்ஆன் அறக்கட்டளை. கோயம்பத்தூர்.(தமிழாக்கமும் கருத்துரையும்)
56.திருக்குர்ஆன் (தமிழில்)
மன்னர் ஃபஹ்து குர்ஆன் வளாகம்,மதீனா முனவ்வரா.
இதுவரை வெளிவந்துள்ள இரண்டு இலட்சம் தப்ஸீர்களில், மொழி பெயர்ப்பகளில் 20,000 விளக்க வுரைகளுக்குக் குறையாமல் திரிப்போலியிலுள்ள நூல்நிலையத்தில் இருப்பதாக டாக்டர் அர்னால்ட் கூறுகிறார். ஆங்கிலம், இலத்தீன், ஜெர்மனி, டச்சு ,பிரஞ்சு, ரஷ்யா ஆகிய மொழிகளிலெல்லாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment